வெளுக்குது விற்பனை.. ரூ.9.499-க்கு 48MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி (TECNO Spark 30C 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு சோனி சென்சாருடன் 48 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,499ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.500 உடனடி டிஸ்கவுண்ட் போக ரூ.9,499 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது.

இதற்கு ரூ.650 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கொடுக்கிறது. ஆகவே, ரூ.12,349 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மிட்நைட் ஷேடோ (Midnight Shadow), அரோரா கிளவுட் (Aurora Cloud) மற்றும் அசூர் ஸ்கை (Azure Sky) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி அம்சங்கள் (TECNO Spark 30C 5G Specification): இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஹைஓஎஸ் 14 (HiOS 14) கிடைக்கிறது. 4 வருடங்களுக்கு லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கிடைக்கும்.
இந்த பட்ஜெட்டுக்கு கிடைக்கும் ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) சென்சாருடன் 48 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 6.67 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே உள்ளது.
இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் டைப்-சி போர்ட் கிடைக்கிறது. 8 எம்எம் தடிமன் மற்றும் 189.2 கிராம் எடை கொண்டிருக்கிறது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் ஐஆர் சென்சார் (IR Sensor) கிடைக்கிறது.
இதுவொரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கிறது. ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) போன்ற வழக்கமான கனெக்டிவிட்டிகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








