Home
Mobile

ஒரே போன்.. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விருந்து வைத்த Tecno.. ரூ.14,000 விலைல பெஸ்ட் போனாக மாறுமா? என்ன மாடல்?

டெக்னோ (Tecno) நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிக விரைவில் டெக்னோ ஸ்பார்க் 30C 5ஜி (Tecno Spark 30C 5G) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய Tecno Spark 30C 5G ஸ்மார்ட்போனை நிறுவனம் வரும் அக்டோபர் 8, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யுமென்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 30C 5ஜி பட்ஜெட் விருப்பமாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? மற்றும் இதன் விலை என்ன? என்பதை தெரிந்துகொள்ளலாம்.

டெக்னோ நிறுவனம் அதன் ஸ்பார்க் சீரிஸ் வரிசையில், புதிய ஸ்மார்ட்போனை சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அக்டோபர் 1, 2024 ஆம் தேதி அறிவித்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் Tecno Spark 30C 5G என்ற பெயருடன் வருகிற அக்டோபர் 8, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதை Tecno பிராண்ட் உறுதி செய்துள்ளது.

ஒரே போன்.. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விருந்து வைத்த Tecno..

டெக்னோ ஸ்பார்க் 30C 5ஜி (Tecno Spark 30C 5G):

இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 30C 5ஜி (Tecno Spark 30C 5G) சாதனம் 6.67' இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 720 x 1,600 பிக்சல் கொண்ட டிஸ்பிளேவாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவின் மைய பகுதியில் பன்ச் ஹோல் டிசைன் வடிவமைப்பை கொண்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஒரு பட்ஜெட் செக்மென்ட் 5ஜி மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சாதனம் AI அம்சத்துடன் இயங்கும் பேக் கேமராவுடன் வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. புதிய டெக்னோ ஸ்பார்க் 30C 5ஜி (Tecno Spark 30C 5G) போனில் 48MP சோனி கேமராவுடன் + 8MP வரும் என்று நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 30C 5ஜி (Tecno Spark 30C 5G) போன் ஆர்பிட் பிளாக் (Orbit Black) மற்றும் ஆர்பிட் வைட் (Orbit White) ஆகிய இரண்டு நிறங்களில் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் டெக்னோ ஸ்பார்க் வரிசையில் உள்ள டெக்னோ ஸ்பார்க் 30 (Tecno Spark 30) மற்றும் டெக்னோ ஸ்பார்க் 30 ப்ரோ (Tecno Spark 30 Pro) ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளிவருகிறது.

டெக்னோ ஸ்பார்க் 30C 5ஜி விலை என்ன? (Tecno Spark 30C 5G Price Details):

இந்த போன் மேஜிக் ஸ்கின் 3.0 உடன் இயங்கும் என்று கூறப்படுகிறது. Tecno Spark 30C ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் ஹீலியோ G81 சிப்செட் (MediaTek's Helio G81 SoC) உடன் இந்த சாதனம் வருகிறது. இது 8GB ரேம் உடன் 256GB ஸ்டோரேஜ் மாடல்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது IP54 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் ஆதரவை கொண்டுள்ளது.

இதில் 4GB ரேம் +128GB, 6GB ரேம் +128GB, 4GB +256GB, மற்றும் 8GB ரேம் +256GB வேரியண்ட் மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் 18W சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இந்த போனின் விலை பற்றிய தகவல்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை, இருப்பினும் இது ரூ. 14,000 விலை புள்ளியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே போனில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விருந்து வைக்க பார்க்கிறதா Tecno?

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark 30C 5G Launch Set for October 8 With AI 48MP Camera 5000mAh Battery Price Rs 14000 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X