Home
Mobile

மிரட்டிவிட்டாப்ல.. பட்ஜெட்ல SONY கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

மார்கெட் மிரளும் பட்ஜெட்டில் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கொண்ட 64 எம்பி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, டால்பி அட்மோஸ் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி போன்ற பக்கா பீச்சர்களுடன் டெக்னோ ஸ்பார்க் 30 (TECNO SPARK 30) போன் வெளியாகி இருக்கிறது. இந்த டெக்னோ போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

டெக்னோ ஸ்பார்க் 30 அம்சங்கள் (TECNO SPARK 30 Specifications): இந்த டெக்னோ போனில் வெட் & ஆய்லி டச் (Wet & Oily Touch) கொண்ட 6.78 இன்ச் (1080 × 2460 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. பஞ்ச்-ஹோல் டிசைன் (Punch Hole Design) வருகிறது.

மிரட்டிவிட்டாப்ல.. பட்ஜெட்ல SONY கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி91 எஸ்ஓசி (MediaTek Helio G91 SoC) சிப்செட் வருகிறது. ஆகவே, மீடியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். சோனி ஐஎம்எக்ஸ்682 (SONY IMX682) சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா வருகிறது. மேலும், செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் செட்டப் (Dual Rear Setup) கொண்டிருக்கிறது.

இருப்பினும், ரியர் ஃபிளாஷ் டிசைனுடன் குவாட் கேமரா சிஸ்டம் போல தெரிகிறது. டூயல் கலர் டெம்பரேச்சர் ஃபிளாஷ் (Dual Color Temperature Flash) கொண்ட 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆகவே, இந்த டெக்னோ ஸ்பார்க் 30 போனின் கேமராவில் மிட்-ரேஞ்ச் அவுட்புட் எதிர்பார்க்கலாம். 8 ஜிபி ரேம் + 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது.

ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கேமராவை போலவே பேட்டரி பீச்சர்களும் பக்காவாக வருகின்றன. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

ஆடியோவை பார்க்கையில், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) வருகின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) பேக் செய்யப்பட்டுள்ளது. டெக்னோவின் ஹைய்ஓஎஸ் (HiOS) வருகிறது. இந்த டெக்னோவில் IP64 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.

இதுவொரு எண்ட்ரி-லெவல் 4ஜி சிப்செட் கொண்டிருப்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது. மேலும், ப்ளூடூத் (Bluetooth), வை-பை (Wi-Fi), என்எப்சி (NFC) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதுபோக, இன்பிராரெட் ரிமோட் கன்ட்ரோல் (Infrared Remote Control) சப்போர்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த டெக்னோ ஸ்பார்க் 30 போனில் அஸ்ட்ரல் ஐஸ் (Astral lce) மற்றும் ஸ்டெல்லர் ஷேடோ (Stellar Shadow) ஆகிய கலர்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த போனின் பீச்சர்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், எண்ட்ரி-லெவல் மாடலாக இருப்பதால், ரூ.10000 - ரூ.12000 பட்ஜெட்டில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை.

முதலில் குளோபல் மார்கெட்டுக்கு வந்துள்ளது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் வெளியாகி விற்பனைக்கு இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த டெக்னோ ஸ்பார்க் 30 போனை இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். மலிவான பட்ஜெட்டில் பிரீமியம் டிசைன் மற்றும் பக்கா பீச்சர்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த டெக்னோ நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO SPARK 30 With 16GB RAM 64MP Camera 5000mAh Battery Launched Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X