Home
Mobile

மீண்டும் மீண்டுமா.. 4ஜிபி ரேம்.. கம்மி விலை.. மிரட்டலான டெக்னோ போன்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் சமீபத்தில் டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி (TECNO PHANTOM V Flip 5G) போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது டெக்னோ ஸ்பார்க் 20சி போனை அறிமுகம் செய்ய உள்ளது டெக்னோ நிறுவனம்.

அதாவது வரும் வாரங்களில் டெக்னோ ஸ்பார்க் 20சி (Tecno Spark 20C) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் தரமான மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

மீண்டும் மீண்டுமா.. 4ஜிபி ரேம்.. கம்மி விலை.. மிரட்டலான டெக்னோ போன்..

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அசத்தலான டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5.0, உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போன் கம்மி விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. தற்போது டெக்னோ ஸ்பார்க் 20சி போனின் சில அம்சங்கள் தான் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே டெக்னோ நிறுவனம் அறிமுகம் செய்த டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 6என்எம் பிராசஸர் (MediaTek Dimensity 8050 6nm processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனில் ஏஆர்எம் ஜி77 எம்சி9 ஜிபியு (ARM G77 MC9 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்பிளே உள்ளது. குறிப்பாக இந்த டிஸ்பிளே 1080×2640 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 100 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த போனில் 1.32-இன்ச் வெளிப்புற டிஸ்பிளேவும் உள்ளது. குறிப்பாக இதன் வெளிப்புற டிஸ்பிளே வட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சின்ன டிஸ்பிளே 360 x 360 பிக்சல்ஸ், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

64எம்பி RGBW பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி போன். எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி போன். எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு இந்த போனில சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) வருகிறது.

மீண்டும் மீண்டுமா.. 4ஜிபி ரேம்.. கம்மி விலை.. மிரட்டலான டெக்னோ போன்..

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். மிஸ்டிக் டான் (Mystic Dawn)மற்றும் ஐகானிக் பிளாக் (Iconic Black) நிறங்களில் லீச்சி-பேட்டர்ன் டிசைன் கொண்ட லெதர் பேக்குடன் வெளிவந்துள்ளது டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி போன்.

இந்த டெக்னோ ஃபாண்டம் வி ஃபிளிப் 5ஜி (TECNO PHANTOM V Flip 5G) ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark 20C with MediaTek Helio P35 will be launched soon: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X