மார்கெட் காலி.. ரூ.7999க்கு 16GB ரேம்.. 50MP கேமரா.. DYNAMIC பீச்சர்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்த பட்ஜெட்டுக்கு எப்படிங்க முடியுது? என்று மூக்கில் விரல் வைக்கும்படியான விலையில் 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 50எம்பி கேமரா, டைனாமிக் போர்ட் பீச்சர், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 20சி (Tecno Spark 20C) போன் களமிறங்கியிருக்கிறது.
டெக்னோ ஸ்பார்க் 20சி அம்சங்கள் (Tecno Spark 20C Specifications): இந்த டெக்னோ போனில் 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃரெஷ் ரேட் கொண்ட பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-hole Display) மாடலாகும்.

இந்த டெக்னோவில் டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சர் வருகிறது. பேட்டரி சார்ஜிங், பேஸ் அன்லாக் மற்றும் காலிங் அனிமேஷன்களை இந்த பீச்சர் மூலம் பார்த்து கொள்ளலாம். ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 (Octa Core MediaTek Helio G36) சிப்செட் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஹைஓஎஸ் (HiOS) வருகிறது. 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) கொண்டிருக்கிறது. அதோடு 128 ஜிபி மெமரி மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி போனில் டூயல் ஃபிளாஷ் (Dual Flash) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) வருகிறது. இந்த கேமராவில் டைம்-லேப்ஸ் (Time Lapse) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.
இந்த போனில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மற்றும் ராபிட் பேஸ் அன்லாக் (Rapid Face Unlock) சப்போர்ட் வருகிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. 5000mAh பேட்டரி கொண்டுள்ளது.
இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி (Type-C) போர்ட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8.55 மிமீ தடிமன் மற்றும் 189 கிராம் எடை கொண்டிருக்கிறது. இதுவொரு 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
அதோடு ஜிபிஎஸ் (GPS), வை-பை (WiFi), எப்எம் (FM) மற்றும் ஓடிஜி (OTG) சப்போர்ட் வருகிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி போனில் கிராவிட்டி பிளாக் (Gravity Black), மிஸ்டரி ஒயிட் (Mystery White), மேஜிக் ஸ்கின் கிரீன் (Magic Skin Green), அல்பெங்லோ கோல்டு (Alpenglow Gold) ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999 ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ரூ.1000 அறிமுக சலுகையுடன் ரூ.7,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் மார்ச் 5ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








