Home
Mobile

வாரி தூக்கும் பட்ஜெட்.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. அறிமுகமானது டெக்னோ போன்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 20சி (Tecno Spark 20C) எனும் ஸ்மார்ட்போனை சத்தமின்றி அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, டூயல் கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ ஸ்பார்க் 20சி அம்சங்கள் (Tecno Spark 20C specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 720 X 1612 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. அறிமுகமானது டெக்னோ போன்.. எந்த மாடல்?

இந்த போனில் தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் டெக்னோ ஸ்பார்க் 20சி. அதேபோல் 8ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி போன். பின்பு இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த போனில் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னோ ஸ்மார்ட்போன்.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் மாடல். கிராவிட்டி பிளாக் ( Gravity Black), மிஸ்டரி ஒயிட் (Mystery White), அல்பெங்லோ கோல்ட் (Alpenglow Gold) மற்றும் மேஜிக் ஸ்கின் (Magic Skin) நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி போன்.

 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. அறிமுகமானது டெக்னோ போன்.. எந்த மாடல்?

4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது டெக்னோ ஸ்பார்க் 20சி போன். ஆனால் இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை இன்னும் வெளியிடவில்லை டெக்னோ நிறுவனம். விரைவில் இந்த போனின் விற்பனை விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் ரூ.10,000-க்கு கீழ் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக டெக்னோ நிறுவனம் கடந்த சில மாதங்களில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவந்த ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark 20c launched with 50MP camera, 128GB storage: check specifications, price, availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X