மார்க்கெட்டே மிரள போகுது.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?
டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்த புதிய போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும் டெக்னோ ஸ்பார்க் 20சி போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் ஆனது வரும் பிப்ரவரி 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளாக், ஒயிட், அல்பெங்லோ கோல்ட் (Alpenglow Gold), கிரீன் நிறங்களில் இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 20சி அம்சங்கள் (Tecno Spark 20C specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு 720 X 1612 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
டெக்னோ ஸ்பார்க் 20சி போனில் தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் பிராசஸர் ( Octa-Core MediaTek processor) வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை ( Android 13 OS) அடிப்படையாகக் கொண்டு இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
குறிப்பாக 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் டெக்னோ ஸ்பார்க் 20சி. அதேபோல் 8ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி போன். பின்பு இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.
இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும்.
அதேபோல எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது. மேலும் இந்த போனில் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னோ நிறுவனம்.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் ( 5000mAh battery) இந்த டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (18W fast charging) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் மாடல்.
4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது டெக்னோ ஸ்பார்க் 20சி போன். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, டெக்னோ ஸ்பார்க் 20சி ஸ்மார்ட்போன் ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications