ஆர்டர் பிச்சிக்கும்.. வெறும் ரூ.12,000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 256GB மெமரி.. 50MP கேமரா.. எந்த போன்?
வெறும் ரூ.12,000 பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50 எம்பி கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட டெக்னோ ஸ்பார்க் 20 (Tecno Spark 20) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
டெக்னோ ஸ்பார்க் 20 அம்சங்கள் (Tecno Spark 20 Specifications): இந்த டெக்னோ போனில் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டிருக்கிறது.

அதோடு ஹைய்ஓஎஸ் 13 யுஐ (HiOS 13 UI) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் 20 போனில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த போனில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 50 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா (Ultra Clear Main Camera) வருகிறது. அதோடு டெப்த் கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவில் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) வருகிறது.
அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait) சப்போர்ட் உள்ளது. அதோடு டூயல் கலர் டெம்பரேச்சர் ஃபிளாஷ் (Dual Colour Temperature Flash), சூப்பர் பிளாஷ் லைட் (Super Flash Light) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த கேமராவில் 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

இந்த டெக்னோ போனில் டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speaker) கொடுக்கப்பட்டுள்ளன. இதில் வால்யூம் பிளஸ் (Volume Plus) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுல்ளது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது.
IP53 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-facing Fingerprint Sensor) வருகிறது. அதேபோல 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது. டூயல் 4ஜி, வை-பை 2.4, ப்ளூடூத் 5.2 மற்றும் ஜிஎன்எஸ்என் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 4 கலர்கள் வருகின்றன.
ஆகவே, கிராவிட்டி பிளாக் (Gravity Black), சைபர் ஒயிட் (Cyber White), நியான் கோல்டு (Neon Gold) மற்றும் மேஜிக் ஸ்கின் 2.0 (Magic Skin 2.0) ப்ளூ ஆகிய கலர்கள் இருக்கின்றன. இதில் ப்ளூ வேரியண்ட்டில் லெதர் பேக் பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனை டெக்னோ நிறுவனம், தனது வெப்சைட்டில் அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை. இருப்பினும், தென் ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் இதன் விலையை டெக்னோ நிறுவனமே குறிப்பிட்டுள்ளது. அந்த விலையே இந்தியாவிலும் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அங்கு இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,466ஆக இருக்கிறது.

அதேபோல, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10522ஆகவும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11877ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்தியாவில் 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.12,000 பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








