அமேசான் அதிர போகுது.. பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. எந்த போன்?
டெக்னோ நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 20 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதாவது அடுத்த மாதம் துவக்கத்தில் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய போன் அமேசான் தளத்தில் தான் விற்பனைக்கு வரும்.
இந்நிலையில் டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே முக்கிய விவரக்குறிப்புகள் அமேசானில் வெளியாகி உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ ஸ்பார்க் 20 அம்சங்கள் (Tecno Spark 20 Specifications): ஹைய்ஓஎஸ் 13 யுஐ (HiOS 13 UI) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் உடன் டெக்னோ ஸ்பார்க் 20 போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
6.7-இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன். இந்த போனின் டிஸ்பிளேவில் 720 x 1612 பிக்சல்கள், 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner) மற்றும் டிடிஎஸ் ஆடியோ ஆதரவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வே கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு கிராவிட்டி பிளாக் (Gravity Black), சைபர் ஒயிட் (Cyber White), நியான் கோல்டு (Neon Gold) மற்றும் மேஜிக் ஸ்கின் 2.0 (Magic Skin 2.0) ஆகிய நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
வை-பை, ப்ளூடூத் 5.2 மற்றும் ஜிஎன்எஸ்என், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன். மேலும் ரூ.10,000 பட்ஜெட்டில் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








