Home
Mobile

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 10X ஜூமிங்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?

108 எம்பி கேமரா, 10X ஜூமிங், 16ஜிபி ரேம், கர்வ்ட் டிஸ்பிளே, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் (Tecno Spark 20 Pro Plus) போன் விரைவில் வெளியாக இருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Tecno Spark 20 Pro Plus Specification): இந்த டெக்னோ போனில் 6.78 இன்ச் (1080 x 2436 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (Curved AMOLED Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

பட்ஜெட்ல 108MP கேமரா.. 10X ஜூமிங்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம் மாடல்!

அதோடு 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது. இந்த டெக்னோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 அல்டிமெட் (Octa Core MediaTek G99 Ultimate) சிப்செட் வருகிறது.

அதுமட்டுமல்லாமல், ஹாய்ஓஎஸ் 14 (HiOS14) மற்றும் கேமிங் பிரியர்களுக்கான மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதோடு பிக்சர் குவாலிட்டிக்காக அரோரா என்ஜின் 2.0 (Aurora Engine 2.0) மற்றும் கேமிங் குவாலிட்டிக்காக டிராவின் என்ஜின் 2.0 (Darwin Engine 2.0) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் போனில் 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் உள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த டெக்னோவில் பட்டையை கிளப்பும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, 108 எம்பி அல்ட்ரா சென்சிங் மெயின் கேமரா (Ultra Sensing Main Camera) வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் 3X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்ல 108MP கேமரா.. 10X ஜூமிங்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம் மாடல்!

அதோடு சூப்பர் நைட் மோட் (Super Night Mode), மல்டி-ஃப்ரேம் பியூசன் (Multi-frame Fusion) போன்ற பீச்சர்கள் வருகின்றன. அதேபோல சூப்பர் ஃபிளாஷ் லைட் (Super Flash Light), டூயல் வீடியோ (Dual Video), ஸ்லோவ் மோஷன் (Slow Motion) மற்றும் 2K வீடியோ ரெக்கார்டிங் போன்ற கேமரா பீச்சர்களும் இருக்கின்றன.

அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆகவே, கேமராவில் நல்ல அவுட்புட்டை எதிர்பார்க்கலாம். இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் போனில் 33W சூப்பர் சார்ஜ் (Super Charge) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டைப்-சி சப்போர்ட் வருகிறது.

இந்த போனில் டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் (Stereo Dual Speakers) வருகின்றன. இதில் 400% வால்யூம் பூஸ்ட் சப்போர்ட் உள்ளது. அதோடு ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதோபோல நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் கொண்ட டூயல் மைக் (Dual-Mic) வருகிறது.

இந்த போனில் ஆப்பிள் போன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் அம்சத்தை போலவே டைனாமிக் போர்ட் (Dynamic Port) அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் டெம்போரல் ஆர்பிட்ஸ் (Temporal Orbits) பிளாக், லூனார் ஃப்ரோஸ்ட் (Lunar Frost) வைட், ரேடியன்ட் ஸ்டார்ஸ்ட்ரீம் (Radiant Starstream) கோல்டு ஆகிய கலர்கள் வருகின்றன.

அதேபோல மேஜிக் ஸ்கின் 2.0 (Magic Skin 2.0 ) க்ரீன் என்னும் லெதர் பேக் பேனல் கொண்ட வேரியண்ட்டும் இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்டுள்ளது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த போன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. முதலில் மலேசியாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த போனின் ஆரம்ப விலை ரூ.20,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் டெக்னோ பாப் 8 போன் வெளியாக இருப்பதால், அடுத்த சில வாரங்களில் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் போன் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark 20 Pro Plus With 108MP Camera, 16GB RAM Announced Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X