Home
Mobile

ஆர்டர் பிச்சிக்கும். வெறும் ரூ.8,400 போதும்.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. 256GB மெமரி.. எந்த போன்?

டெக்னோ நிறுவனம் புதிய டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் 108எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ அம்சங்கள்: 6.7-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 20 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆர்டர் பிச்சிக்கும். வெறும் ரூ.8,400 போதும்.. எந்த போன்?

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஹீலியோ ஜி99 சிப்செட் (Octa-core Helio G99 chipset) வசதியுடன் இந்த அசத்தலான டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்மார்ட்போன்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்மார்ட்போன்.

108எம்பி பிரைமரி கேமரா உட்பட ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு டூயல் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்லைட் பிளாக் (Moonlit Black), ஃப்ரோஸ்டி ஐவரி (Frosty Ivory), சன்செட் ப்ளஷ் (Sunset Blush) மற்றும் மேஜிக் ஸ்கின் கிரீன் (Magic Skin Green) நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்டர் பிச்சிக்கும். வெறும் ரூ.8,400 போதும்.. எந்த போன்?

டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு உள்ளது. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை PHP 5,599 (இந்திய மதிப்பில் ரூ.8,400) ஆக உள்ளது. தற்போது இந்த போன் பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark 20 Pro launched with Helio G99 SoC, 108MP camera: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X