Home
Mobile

மிரண்டுபோன மார்க்கெட்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. அறிமுகமானது புதிய டெக்னோ 5ஜி போன்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி (Tecno Spark 20 Pro 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 108எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Tecno Spark 20 Pro 5G specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 1,080x2,460 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.

மிரண்டுபோன மார்க்கெட்.. அறிமுகமானது புதிய டெக்னோ 5ஜி போன்..

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே 3ஒ ஆப்டிகல் ஜூம் ஆதரவும் கொண்டுள்ளது இந்த போனின் கேமரா. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (fingerprint sensor) மற்றும்
டால்பி அட்மாஸ் (Dolby Atmos)-டியூன் செய்யப்பட்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (dual stereo speakers) கொண்டுள்ளது இந்த போன்.

மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட்(MediaTek Dimensity 6080) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

மிரண்டுபோன மார்க்கெட்.. அறிமுகமானது புதிய டெக்னோ 5ஜி போன்..

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மாரட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சென்சார் வசதிகள் உள்ளன. 5ஜி, ப்ளூடூத் 5.3, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

ஒயிட் (White), நியான் கிரீன் (Neon Green) மற்றும் ஸ்டார்ட்ரெயில் பிளாக் (Startrail Black) உள்ளிட்ட நிறங்களைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதேபோல் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி போன் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் தெரிவிக்கப்படும். குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tecno Spark 20 Pro 5G Launched: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X