அதிருது இந்திய மார்க்கெட்.. கம்மி பட்ஜெட்ல 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. எந்த போன்?
டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி (Tecno Spark 20 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போனின் இந்திய அறிமுக தேதி வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 108எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்..
அதாவது வரும் ஜூலை 9-ம் தேதி இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த மாதம் தான் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Tecno Spark 20 Pro 5G specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் (MediaTek Dimensity 6080) வசதியைக் கொண்டுள்ளது டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்தியாவுக்கு வரும் இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 1,080x2,460 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராக்கள் 3X ஆப்டிகல் ஜூம் ஆதரவும் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. அதேபோல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (fingerprint sensor) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos)-டியூன் செய்யப்பட்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (dual stereo speakers) கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மாரட்போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சென்சார் வசதிகள் உள்ளன. இதுதவிர 5ஜி, ப்ளூடூத் 5.3, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ; டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








