Home
Mobile

SALE ஆரம்பம்.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. 256GB மெமரி.. LCD டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு தான் டெக்னோ ஸ்பார்க் 20 எனும் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ ஸ்பார்க் 20 அம்சங்கள் (Tecno Spark 20 specifications): 6.56-இன்ச் எச்டிபிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன். இந்த போனின் டிஸ்பிளேவில் 720 x 1612 பிக்சல்கள், 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

SALE ஆரம்பம்.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. எந்த போன்?

குறிப்பாக மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் உடன் டெக்னோ ஸ்பார்க் 20 போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali-G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம்+ 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம்+ 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஹைய்ஓஎஸ் 13 (HiOS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் டிடிஎஸ் ஆடியோ ஆதரவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன். 50எம்பி பிரைமரி கேமரா + VI லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு கிராவிட்டி பிளாக் (Gravity Black), சைபர் ஒயிட் (Cyber White), நியான் கோல்டு (Neon Gold) மற்றும் மேஜிக் ஸ்கின் 2.0 (Magic Skin 2.0) ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

SALE ஆரம்பம்.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. எந்த போன்?

அதேபோல் ஐபி53 (IP53) ரேட்டிங் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் 4ஜி, ஜிபிஎஸ், வை-பை 802.11 ஏசி (WiFi 802.11 ac), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொண்டுள்ளது டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன்.

டெக்னோ ஸ்பார்க் 20 விலை: 8ஜிபி ரேம்+ 128ஜிபி மெமரி கொண்ட டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போனை ரூ.10,499 விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.11,499 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark 20 goes on sale today for the first time on Amazon: check specifications, price offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X