iPhone ரசிகர்கள் தான் டார்கெட்.. கம்மி காசில் ஐபோன் தோற்றத்தில் ஒரு Android போன்.. எந்த மாடல்?
ஐபோன் (iPhone) ரசிகர்களை டார்கெட் செய்து ஐபோன் 14 ப்ரோ போன்ற வடிவத்துடன் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்மார்ட்போன் (smartphone) சந்தைக்குள் அறிமுகமாகவிருக்கிறது. இது என்ன போன்? இது என்ன மாடல்? இது என்ன விலை? முழு விபரம் இதோ.
இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ (Tecno Spark 20 Pro) என்ற பெயருடன் வருகிறது. இத்துடன் சேர்த்து, டெக்னோ ஸ்பார்க் 20 4ஜி (Tecno Spark 20 4G) என்ற மாடலும் அறிமுகமவிருக்கிறது. அறிமுகத்திற்கு முன்பாக இந்த போன்களின் ரெண்டர் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் லீக் கண்டுபிடிக்கப்பட்டது.

டெக்னோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு மற்றும் வெளியீட்டு காலவரிசை விபரங்கள் இப்போது டிப்ஸ்டரால் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. ஐபோன் டிசைனில் ஒரு தரமான ஆண்ட்ராய்டு போனை வாங்க உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானது. இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ (Tecno Spark 20 Pro):
சமீபத்திய லீக் தகவல் பராஸ் குல்காணி (Paras Guglani) முன்னால் டிவிட்டர் என்று அழைக்கப்பட்ட இப்போது எக்ஸ் (X) என்ற பெயரில் இயங்கும் அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் மூலம் இந்த போனின் புகைப்படங்களை வெளிப்படுத்தியுள்ளார். டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோவின் படங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், இது ஐபோன் 15 ப்ரோ மாடல்களைப் போலவே காட்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இதன் கேமரா பம்ப் ஐபோன் 15 பிராவில் இருப்பது போன்ற பெரிய பின்புற கேமரா பம்பை வெளிப்படுத்துகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் வீதம் கொண்ட டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் மையத்தில் பன்ச் ஹோல் உடன் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கிறது.
இந்த போனில் 108 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வரவிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ (Tecno Spark 20 Pro) ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் ப்ரோ வேரியண்ட் உடன் ப்ரோ+ மாடலையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் ஜனவரி 2024 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று பராஸ் நம்புகிறார்.
டெக்னோ ஸ்பார்க் 20 4ஜி (Tecno Spark 20 4G):
இந்த ப்ரோ வேரியண்ட் மாடலுடன், இதில் அடைப்படை வேரியன்ட் மாடலான டெக்னோ ஸ்பார்க் 20 4ஜி (Tecno Spark 20 4G) மாடல் தொடர்பான முக்கிய விவரங்களும் லீக் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஏற்கனவே ஆப்பிரிக்க சந்தைகளில் தோன்றியுள்ளது. எனவே இந்த சாதனத்தின் லைவ் புகைப்படங்கள் எல்லாம் லீக் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் இந்தியாவில் 2023 டிசம்பரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஹை-வேரியண்ட் ப்ரோ மாடல்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை, நிறுவனம் Tecno Spark 20C மாடலை மட்டுமே அறிவித்துள்ளது. Tecno Spark 20 4G இன் வடிவமைப்பும் சமீபத்தில் லீக் செய்யப்பட்ட ரெண்டர்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோவின் சில முக்கிய விவரக்குறிப்புகள் FCC பட்டியல் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.
டெக்னோ ஸ்பார்க் 20 ப்ரோ பிளஸ் (Tecno Spark 20 Pro+) மாடல்களும் ஹை-வேரியண்ட் மாடலுடன் இதன் வெளியீடும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்களின் அறிமுக தேதி லீக் தகவலில் குறிப்பிடுவது போல சரியான நேரத்தில் நடைபெறலாம்.


Click it and Unblock the Notifications