எழுதி வச்சுக்கோங்க! அடுத்த பெஸ்ட் பட்ஜெட் Mobile போன் இது தான்.! Tecno Spark 10C விலை என்ன?
டெக்னோ (Tecno) ஸ்மார்ட்போன் நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது டெக்னோ ஸ்பார்க் 10C (Tecno Spark 10C) என்ற பெயரில் வெளிவரவுள்ளது.
கூகுள் பிளே கன்சோலில் காணப்பட்ட புதிய லீக் ஸ்மார்ட்போன் பட்டியலின் படி, சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட, ஸ்மார்ட்போன்கள் மற்றும் துணைக்கருவிகள் உற்பத்தியாளர் நிறுவனமான Tecno, வரும் மாதங்களில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்திய தகவலின் படி, கேள்விக்குரிய சாதனம் Tecno Spark 10C மாடல் என்பது உறுதியாகியுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 10C தான் அடுத்த புது பட்ஜெட் மொபைல்-ஆ!
இது டீசெண்டான சிறப்பம்சம் மற்றும் பட்ஜெட் விலையில் தரமான விவரக்குறிப்புளை பேக் செய்யும் ஒரு பட்ஜெட் சாதனமாகும். இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், KI5k என்ற குறியீட்டு பெயரைக் கொண்டு, டெக்னோ ஸ்பார்க் 10C சாதனம் பட்டியலில் காணப்பட்டுள்ளது. இது என்ன விலையில் வரும்? எந்த தேதியில் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.
Tecno Spark 10C சிறப்பம்சம்
வெளியான தகவலின் படி, Tecno Spark 10C ஸ்மார்ட்போன் ஆனது 720 x 1612 பிக்சல்கள் உடைய 320ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 20.1:9 விகிதத்துடன் கூடிய HD+ டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது வாட்டர் டிராப் நாட்ச் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னோ ஸ்பார்க் 10C சாதனம் 4ஜிபி ரேம் உடன்64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சாதனம், யுனிசாக் T606 ஆக்டா கோர் சிப் உடன் இயங்கும். இந்த் சாதனத்தில் ஆர்ம் டிசைன் மாலி G57 ஜிபியு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில், இது ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும் என்று கூறப்படுகிறது. கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 16 எம்பி + 2 எம்பி + 2 எம்பி கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.

Tecno Spark 10C எப்போது அறிமுகமாகும்?
இந்த Tecno Spark 10C சாதனத்தின் முன்பக்கத்தில், 8 எம்பி கொண்ட செல்பி கேமராவையும் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கூகிள் பிளே கன்சோலில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி, இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சாதனம் வரும் மார்ச் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
டெக்னோவிற்கான வரிசையின் மிகவும் மலிவு விலை மாறுபாட்டைக் குறிக்கும் கடைசி 'C' பிராண்டட் ஸ்மார்ட்போன், கடந்த ஆண்டு ஜனவரியில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது டெக்னோ ஸ்பார்க் 8C என்ற பெயரில் ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது நிறுவனம், சுவாரஸ்யமாக அதே SoC மற்றும் அதே டிஸ்பிளேவுடன் RAM அம்சத்தை மாற்றி, மற்ற சில அம்சங்களையும் மேம்படுத்தி Tecno Spark 10C போனை வெளியிடுவதாகத் தெரிகிறது.
Tecno Spark 10C விலை என்ன?
Tecno ஸ்பார்க் 8C சாதனம் தற்போது Flipkart இல் ரூ.7,899 விலையில் கிடைக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 10C ஒரு வாரம் கழித்து வெளியிடப்படும் என்று வதந்திகள் பரவி வருவதால், டெக்னோ தனது பட்ஜெட் ஸ்மார்ட்போனை எவ்வாறு மேம்படுத்தியிருக்கும் என்பதை காண ஆவலாக இருக்கிறது. இந்த சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது இந்தியாவில் ரூ.12, 990 விலை புள்ளியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications