Home
Mobile

50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அசத்திய TECNO.!

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய Tecno Spark 10 ப்ரோ போன் ஆனது பெரிய டிஸ்பிளே, மீடியாடெக் சிப்செட், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

இப்போது இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த புதிய போன் 6.8-இன்ச் ஐபிஎஸ் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2460 x 1080 பிக்சல்ஸ், 20.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் ப்ரோ போனைஅறிமுகம் செய்து அசத்திய TECNO.!

அதேபோல் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்புHiOS 12.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டூயல் ரியர் கேமரா

டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்மார்ட்போன்.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் ப்ரோ போனைஅறிமுகம் செய்து அசத்திய TECNO.!

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் ப்ரோ போனைஅறிமுகம் செய்து அசத்திய TECNO.!

கனெக்டிவிட்டி

குறிப்பாக டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம், 4ஜி, வைஃபை, புளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவைக் கொண்டுள்ளது. ஸ்டார்ரி பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் நிறங்களில் இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெக்னோ நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை பற்றிய தகவலை இன்னும் வெளியிடவில்லை அந்நிறுவனம். ஆனாலும் இந்த போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Spark 10 Pro With 50MP camera battery Launched in India: Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X