Home
Mobile

அடிச்சு தூக்கும் ஆர்டர்.. வெறும் ரூ.10,000 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் மிரளும் டிஸ்கவுண்ட்டில் 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ (TECNO SPARK 10 Pro) போன், வெறும் ரூ.10,000 பட்ஜெட்டுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ அம்சங்கள் (TECNO SPARK 10 Pro Specification): இந்த டெக்னோ போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (Octa Core MediaTek Helio G88 12nm ) சிப்செட் வருகிறது. அதோடு ஹாய்ஓஎஸ் 12.6 (HiOS 12.6) மற்றும் மாலி ஜி52 ஜிபியு (Mali - G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.10000 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த மாடலில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 580 நிட்ஸ் மேக்ஸ் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 270Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் டிசிஐ-பி3 கலர் காமட் சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த டெக்னோ போனில் டூயல் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஏஐ கேமரா மாடலாகும். இதில் சூப்பர் போர்ட்ராய்டு (Super Portrait), சூப்பர் நைட் (Super Night) மற்றும் சூப்பர் வீடியோ (Super Videos) போன்ற பிரத்யேக மோட்கள் வருகின்றன.

அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது.

ரூ.10000 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ போனானது, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ் (DTS) சப்போர்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) வருகிறது. அதோடு 3.5மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஃஎப்எம் ரோடியோ (FM Radio) கொண்டுள்ளது.

இந்த போனில் ப்ளூடூத், வை-பை 802, என்ஃஎப்சி மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன. இந்த போன் 4ஜி மாடல் என்பதால், டூயல் 4ஜி சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ போனில் பேர்ல் வைட் (Pearl White), லூனார் எலிப்ஸ் (Lunar Eclipse) மற்றும் ஸ்டார்ரி பிளாக் (Starry Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த டெக்னோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.11,387ஆக விலை குறைக்கப்பட்டது. இப்போது, இந்த விலையிலும் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு, ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியை எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.10000 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

ஆகவே, இந்த போனை வெறும் ரூ.10,387 பட்ஜெட்டில் வாங்கிக் கொள்ளலாம். மிகவும் கம்மியான விலையில் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 32 எம்பி செல்பீ கேமரா போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்கள் வேண்டும் என்றால், இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மாடல் நல்ல தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
TECNO SPARK 10 Pro With 16GB RAM, Helio G88 Chip Sale With Offer in Flipkart Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X