விஸ்வரூப விலை.. வெறும் ரூ.11,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 32MP செல்பீ கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டையே தூக்கி சாப்பிடும் விதமாக வெறும் ரூ.11,999 விலையில் 16ஜிபி ரேம், 32எம்பி செல்பீ கேமரா, 1டிபி மெமரி சப்போர்ட் போன்ற அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ (TECNO SPARK 10 Pro) போனின் புது எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வெற்றிகரமாக நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்கியதை குறிக்கும் விதமாக இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்ப்ளோரர் எடிஷன் (TECNO SPARK 10 Pro Moon Explorer Edition) வெளியிடப்பட்டுள்ளது. இந்த போனின் மற்ற அம்சங்கள், விற்பனை தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ அம்சங்கள் (TECNO SPARK 10 Pro Specification): இந்த டெக்னோ போன் 6.8 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 270Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 580 நிட்ஸ் மேக்ஸ் பிரைட்னஸ் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் ஹாய்ஓஎஸ் 12.6 (HiOS 12.6) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (Octa Core MediaTek Helio G88 12nm ) சிப்செட் வருகிறது. அதோடு ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali - G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த டெக்னோ போன் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்னும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த விலையில் 32 எம்பி செல்பீ கேமரா வருவது, இதுவே முதல் முறையாகும்.
இந்த டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்ப்ளோரர் எடிஷனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor), 3.5மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack), ஃஎப்எம் ரோடியோ (FM Radio) மற்றும் டிடிஎஸ் சப்போர்ட் ஸ்பீக்கர்கள் (DTS Support Speakers) கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் (Bluetooth 5), ஜிபிஎஸ் (GPS), என்ஃஎப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போன் லூனார் எலிப்ஸ் (Lunar Eclipse), பேர்ல் வைட் (Pearl White) மற்றும் ஸ்டார்ரி பிளாக் (Starry Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது, இந்த மூன் எக்ஸ்ப்ளோரர் எடிஷன் பிளாக் மற்றும் வைட் கலந்த கலரில் கிடைக்கிறது.
இந்த மேட் பினிஷிங் பேனல் கொண்டுள்ளது. இந்த போனின் 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெக்னோ ரீடெய்ல் ஸ்டோர்களில் ப்ரீ-புக்கிங் தொடங்கிவிட்டது. வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
வரும் நாட்களில் அமேசான் (Amazon) தளத்திலும் விற்பனைக்கு வர அதிக வாய்ப்புள்ளது. இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம், 50 எம்பி மெயின் கேமரா, 32 எம்பி செல்பீ கேமரா போன்ற அம்சங்கள் கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications