ரூ.9,999 விலையில் டெக்னோ போவா ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட்டில் விற்பனை!
டெக்னோ போவா ஸ்மார்ட்போன் இந்தியாவில் புதிய தொடர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. டெக்னோ போவா ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.
டெக்னோ போவா ஸ்மார்ட்போன் விலை குறித்து பார்க்கையில் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.9,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.11,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.
டெக்னோ போவா ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் டாட்-இன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1640 பிக்சல் தீர்மானம், 20:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.

குறிப்பாக டெக்கோ போவா ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ் + ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
டெக்னோ போவா ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் HiOS 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது இந்த ஸ்மார்ட்போன், எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது டெக்னோ போவா ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி.போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications