Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. 5.95 மி.மீ ஸ்லிம்மில் 5160mAh பேட்டரி.. 3D டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இதைவிட மலிவான விலைக்கு ஸ்லிம் ஸ்மார்ட்போனை வாங்க முடியாது என்று அடித்து சொல்லும்படியான விலைக்கு வெளியான டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி (TECNO Pova Slim 5G) மாடல் இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. 5.95 எம்எம் தடிமனில் 5160mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இந்த தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,990 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.23,740 விலைக்கு இந்த டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இப்போது பீச்சர்களை பார்ப்போம்.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. 5.95 மி.மீ ஸ்லிம்மில் 5160mAh பேட்டரி!

டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி அம்சங்கள் (TECNO Pova Slim 5G Specifications): 6.78 இன்ச் (1224 x 2720 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கொண்ட மாடலாக இந்த போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஹைஓஎஸ் 15 (HiOS 15) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 13 எம்பி செல்பீ கேமராவை இந்த டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரியை கொடுத்துள்ளது.

இந்த பேட்டரியுடன் 5.95 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. 156 கிராம் எடை கொடுத்துள்ளது. ஆகவே, இந்த பட்ஜெட்டில் அல்ட்ரா ஸ்லிம் மாடலாக கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போனாக டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி இருக்கிறது. யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மட்டுமல்லாமல், இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) இந்த டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த போவா ஸ்லிம் 5ஜி இருக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் கொடுத்தது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பாடிக்கும் டிராப் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்படி எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுத்துள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, 4ஜி எல்டிஇ, வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டிகளுடன் இந்த போவா ஸ்லிம் 5ஜி கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
TECNO Pova Slim 5G With MediaTek Dimensity 6400 Chipset Available At Discounted Price on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X