Home
Mobile

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது டெக்னோ 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி (TECNO POVA Slim 5G) ஸ்மார்ட்போனை நாளை (செப்டம்பர் 4) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய டெக்னோ போன் நாளை மதியம் 2 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி அம்சங்கள் (TECNO POVA Slim 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடடெக டைமன்சிட்டி 6400 சிப் (MediaTek Dimensity 6400 chip)உடன் இந்த புதிய டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் ஏஆர்எம் மாலி-ஜி57 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த போனில் உள்ளது.

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது டெக்னோ 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி கர்வ்ட் (3D Curved) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய டெக்னோ போவா 7 ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2436 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search), ஏஐ ரைட்டிங், உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதுவும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் இருக்கும்.

50 எம்பி டூயல் ரியர் கேமரா உடன் டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த போன் 16எம்பி கேமராவும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது. அதேபோல்
5160mAh பேட்டரி இந்த டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி வெளிவரும். மேலும் இந்த புதிய போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

photo credit: gsmarena, Tecno

Best Mobiles in India

English summary
Tecno Pova Slim 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X