Home
Mobile

செப்டம்பர் 4 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 64எம்பி கேமரா.. 5500mAh பேட்டரி.. வருகிறது Tecno 5ஜி போன்..

டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி (TECNO POVA Slim 5G) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 4-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இது உலகின் மிகவும் ஸ்லிம் ஆன 5ஜி ஸ்மார்ட்போன் என்று டெக்னோ நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி அம்சங்கள் (TECNO POVA Slim 5G Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி கர்வ்ட் (3D Curved) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய டெக்னோ போவா 7 ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2436 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Tecno 5ஜி போன்..

அதேபோல் மீடியாடடெக டைமன்சிட்டி 6400 சிப் (MediaTek Dimensity 6400 chip)உடன் இந்த புதிய டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏஆர்எம் மாலி-ஜி57 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search), ஏஐ ரைட்டிங், உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் இருக்கும்.

64எம்பி டூயல் ரியர் கேமரா உடன் டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த போன் 16எம்பி கேமராவும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக 5500எம்ஏஎச் பேட்டரி இந்த டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி வெளிவரும். மேலும் இந்த புதிய போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POVA Slim 5G India Launch Date Announced: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X