Home
Mobile

இதுக்கு மேல என்ன வேணும்.. 156 கிராம் எடையில் நாளைக்கு விற்பனைக்கு வரும் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

உலகின் மிகவும் மெல்லிய ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது டெக்னோ. அதாவது சமீபத்தில் டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி (Tecno Pova Slim 5G) போன் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய டெக்னோ போன் நாளை முதல்முறையாக விற்பனைக்கு வருகிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நாளை (செப்டம்பர் 8) மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு வருகிறது. இப்போது இந்த புதிய டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

156 கிராம் எடையில் நாளைக்கு விற்பனைக்கு வரும் புது 5ஜி போன்..

டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி அம்சங்கள் (Tecno Pova Slim 5G Specifications): 6.78-இன்ச் 1.5கே 3டி கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 20:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் உடன் டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஹைஓஎஸ் 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ஏஐ கால் அசிஸ்டண்ட், ஏஐ ரைட்டிங், ஏஐ இமேஜ் எடிட்டிங் மற்றும் பிரைவசி ப்ளர்ரிங் போன்ற பல ஏஐ அம்சங்கள் இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளன. பின்பு இதனுடன் சர்க்கிள் டு சர்ச் அம்சமும் வருகிறது. குறிப்பாக புதிய டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2 மெகாபிக்சல் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது.

5160mAh பேட்டரி வசதி கொண்டுள்ளது டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதுவும் டெக்னோ நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போன் வெறும் 55 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்.

156 கிராம் எடையில் நாளைக்கு விற்பனைக்கு வரும் புது 5ஜி போன்..

டூயல் சிம் கார்டு ஆதரவு, பில்ட்-இன் இன்ப்ரா-ரெட் ரிமோட் கண்ட்ரோல் சென்சார், டால்பி அட்மோஸ் ட்யூனிங் கொண்ட சிங்கிள் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. பின்பு இந்த போனின் எடை 156 கிராம் ஆகும். கூல் பிளாக், ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்லிம் ஒயிட் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

விலை
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Tecno Pova Slim 5G goes on sale for the first time in India tomorrow: check specifications, price, offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X