Home
Mobile

செப்.8 முதல் அடிச்சு புடிச்சு வாங்க போறாங்க.. ரூ.19,999 க்கு உலகின் மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போன் அறிமுகம்!

டெக்னோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி (Tecno Pova Slim 5G) இன்று (செப்டம்பர் 4) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. வெறும் 5.95மிமீ என்கிற அளவிலான தடிமனை (5.95mm Thickness) கொண்டுள்ளதால், இது உலகின் மிகவும் மெல்லிய ஸ்மார்ட்போன் (World's slimmest smartphone) என்றும் கூறப்படுகிறது.

டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி - முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 3டி கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டைனமிக் மூட் லைட் டிசைனும் உள்ளது, இது ரியர் கேமரா செட்டப்பில் கஸ்டமைஸ்டு செய்யக்கூடிய எல்இடி லைட்களை சேர்க்கிறது.

ரூ.19,999 க்கு உலகின் மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மேலும் இந்த ஸ்மார்ட்போனில், பல வகையான ஏஐ (AI) திறன்களை ஒருங்கிணைத்து, பல அம்சங்களை கையாளும் "எல்லா" ஏ என்று அழைக்கப்படும் ஏஐ அசிஸ்டன்ட்டும் (Ella AI assistant) உள்ளது. கூடவே டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி - விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கூல் பிளாக், ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்லிம் ஒயிட் ஆகிய 3 கலர் ஆப்ஷன்க்ளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இது பிளிப்கார்ட் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் கடைகள் வழியாக வாங்க கிடைக்கும்.

டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி - விரிவான அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5.95 மிமீ தடிமனை மட்டுமே கொண்டு உள்ளது மற்றும் எடையில் 156 கிராம் மட்டுமே உள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5கே 3டி கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை (144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 20:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ) கொண்டுள்ளது; கூடவே இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் உள்ளது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி UFS 2.2 பில்ட்-இன் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி மாடலில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பல இந்திய பிராந்திய மொழிகளை ஆதரிக்கும், டெக்னோ நிறுவனத்தின் சொந்த ஸ்மார்ட் அசிஸ்டெண்ட் ஆன எல்லா ஏஐ உடன் வருகிறது. இது ஏஐ கால் அசிஸ்டண்ட், ஏஐ ரைட்டிங், ஏஐ இமேஜ் எடிட்டிங் மற்றும் பிரைவசி ப்ளர்ரிங் போன்ற ஏஐ அம்சங்களை வழங்கிறது; சர்க்கிள் டு சர்ச் அம்சத்துடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் கார்டு ஆதரவு, பில்ட்-இன் இன்ப்ரா-ரெட் ரிமோட் கண்ட்ரோல் சென்சார், டால்பி அட்மோஸ் ட்யூனிங் கொண்ட சிங்கிள் ஸ்பீக்கர், டைனமிக் மூட் லைட் டிசைன் என அழைக்கப்படும் தனிப்பயனாக்கக்கூடிய எல்இடி லைட்ஸ் மற்றும் KM9 TUV ரைன்லேண்ட் சான்றிதழ் ஆகியவற்றுடன் வருகிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹைஓஎஸ் 15 கொண்டு இயங்கும் டெக்னோ போவா ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5160mAh பேட்டரி மற்றும் 45W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. டெக்னோ நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போன் வெறும் 55 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்; 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே ஆகும்!

Best Mobiles in India

English summary
Tecno Pova Slim 5G 5 95 mm Slim Design Launched in India Price Specifications Sale From Sep 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X