Home
Mobile

அசத்தலான அம்சங்களுடன் டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

டெக்னோ போவா நியோ எனும் ஸ்மார்ட்போனை நைஜீரிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது டெக்னோ நிறுவனம். விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொ

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட டெக்னோ போவா நியோ மாடல் NGN 75,100 (இந்திய மதிப்பில் ரூ.13,800) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கீக் ப்ளூ, அப்சிடியன் பிளாக் மற்றும் பொவேஹி போன்ற நிறங்களில் டெக்னோ போவா நியோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.8-இன்ச் எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே

டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பின்பு 720×1,640 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

த ஸமார்ட்போனில் ஆக்டோ-கோர்

அதேபோல் இந்த ஸமார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும்HiOS 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.அந்நிறுவனம்.

டெக்னோ போவா நியோ

டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13MP மெயின் சென்சார் மற்றும் இரண்டாம் நிலை என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் டூயல் பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டெக்னோ போவா நியோ

டெக்னோ போவா நியோ சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 6000 எம்ஏஎச் பேட்டரி

டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

வைஃபை, ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ், எஃப்எம்

புளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ், எஃப்எம் ரேடியோ, ஒடிஜி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஜி-சென்சார் எனப் பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன் இந்த டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டெக்னோ பாப் 5

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டெக்னோ பாப் 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப்பார்ப்போம்.டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,560 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்

டெக்னோ பாப் 5 எல்டிஇ

டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இந்த ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ மாடல்.மேலும் டீப்சீ லஸ்டர் மற்றும் ஐஸ் ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் வசதி பல ஆப் வசதிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாகஇருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

க்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனின்

புதிய டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில்

இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி மெமரி வசதி உள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் புளூடூத் வி4.2, ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, 3.5 எம்.எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஆர்எஸ், 4ஜி எல்டிஇ உள்ளிட்ட பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ பாப் 5 எல்டிஇஸ்மார்ட்போன்.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பாகிஸ்தான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் டெக்னோ பாப் 5 எல்டிஇ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tecno Pova Neo With Dual Rear Cameras Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X