பட்ஜெட் விலை: 6ஜிபி ரேம், 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன்- கூடவே இயர்பட்ஸ் இலவசம்!

|

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சாதனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் பல்வேறு விலை பிரிவுகளில் புதுப்புது அம்சங்களோடு சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி டெகனோ நிறுவனம் பட்ஜெட் விலை பிரிவு சாதனங்களில் மிகவும் பிரபலமானவையாகும். டெக்னோ போவா நியோ அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் அதன் தேதியையும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போன் கடந்த மாதம் ஆப்ரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. டெக்னோ போவா நியோ வெளியீட்டு தேதி இந்தியாவில் ஜனவரி 20 ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெக்னோ போவா நியோ வெளியீட்டு தேதி

டெக்னோ போவா நியோ வெளியீட்டு தேதி

டெக்னோ போவா நியோ வெளியீட்டு தேதி இந்தியாவில் ஜனவரி 20 ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவின் மூலம் டெக்னோ போவா வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. வெளியிட்ட டுவிட்டின் படி, டெக்னோ போவா நியோ இந்தியாவில் ஜனவரி 20 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட தேதியில் ஸ்மார்ட்போன் கடைகளில் விற்பனைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 720 × 1640 பிக்சல்கள் எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் வருகிறது. இந்த சாதனம் 6.8 இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் முன் எதிர் கொள்ளும் கேமராவை பஞ்ச் ஹோல் நாட்ச் வசதியோடு வருகிறது. இந்த போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் உடன் வருகிறது.

6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

கூடுதலாக போவா நியோ ஸ்மார்ட்போனானது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்தில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் யூஎஸ்பி டைப் சி போர்ட் வசதியை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் உடனான இரட்டை பின்புறம் கேமரா அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரதான பின்புற கேமரா மற்றும் ஏஐ லென்ஸ் வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 எம்பி செல்பி ஸ்னாப்பர் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

மலிவு மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

மலிவு மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

மலிவு மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் டெக்னோ நிறுவனம் பிரபலமான பிராண்டாக மாறி வருகிறது. நிறுவனம் சமீப காலமாக அதன் தயாரிப்பு சலுகைகளை விரிவுப்படுத்தி வருகிறது. அதன்படி இந்த பிராண்டின் சமீபத்திய சாதனமாக டெக்னோ பாப் எல்டிஇ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாதனம் பல்வேறு சிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த சாதனம் ரூ.10,000 விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது.

டெக்னோ பாப் 5 எல்டிஇ விலை மற்றும் இந்தியாவில் கிடைக்கும் தன்மை

டெக்னோ பாப் 5 எல்டிஇ விலை மற்றும் இந்தியாவில் கிடைக்கும் தன்மை

டெக்னோ பாப் 5 எல்டிஇ விலை மற்றும் இந்தியாவில் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். டெக்னோ பாப் 5 எல்டிஇ ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.6299 ஆக இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஷிப்பிங் ஜனவரி 16 முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது ஐஸ் ப்ளூ, டீப்சீ லுஸ்டர் மற்றும் டர்க்கைஸ் சியான் வண்ண விருப்பத்தோடு வருகிறது. டெக்னோ பாப் 5 எல்டிஇ சாதனத்துக்கு அமேசானில் அறிமுகச் சலுகைகள் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tecno Pova Neo Smartphone Going to Launch on January 20 With 6 GB RAM, 6000mAh Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X