டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!

|

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் புதிய டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஹீலியோ ஜி25 சிப்செட் சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெக்னோ போவா நியோ

குறிப்பாக டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் மாடலை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்
வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின்அம்சங்களை சற்று விரிவாகாப் பார்ப்போம்.

விண்கல் பூமியில் மோதி உருவான 555.55 காரட் அரியவகை கருப்பு வைரம்- ஆன்லைன் மூலம் ஏலம்: மதிப்பு என்ன தெரியுமா?விண்கல் பூமியில் மோதி உருவான 555.55 காரட் அரியவகை கருப்பு வைரம்- ஆன்லைன் மூலம் ஏலம்: மதிப்பு என்ன தெரியுமா?

டெக்னோ போவா நியோ

டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பின்பு 720×1,640 பிக்சல்தீர்மானம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

தமிழக வாடிக்கையாளர்களே., சின்ன பிரச்சனை- உங்கள் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்யவும்: ஏர்டெல் அறிவிப்பு!தமிழக வாடிக்கையாளர்களே., சின்ன பிரச்சனை- உங்கள் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்யவும்: ஏர்டெல் அறிவிப்பு!

இந்த ஸமார்ட்போனில் ஆக்டோ-கோர்

அதேபோல் இந்த ஸமார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும்அருமையாக இருக்கும். மேலும்HiOS 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டெக்னோ பாப் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு கம்மியா? அப்போ ஒரு போன் வாங்கலாம் போலயே..டெக்னோ பாப் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு கம்மியா? அப்போ ஒரு போன் வாங்கலாம் போலயே..

 போவா நியோ ஸ்மார்ட்போனின்

டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13MP மெயின் சென்சார் மற்றும் இரண்டாம் நிலை சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் டூயல் பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

குடியரசுத் தினத்தில் வெளியாகும் ரெட்மி நோட் 11 சீரிஸ்- 3 மாடல், 4 வேரியண்ட்கள், 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்!குடியரசுத் தினத்தில் வெளியாகும் ரெட்மி நோட் 11 சீரிஸ்- 3 மாடல், 4 வேரியண்ட்கள், 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்!

போவா நியோ சாதனத்தில் 6GB

டெக்னோ போவா நியோ சாதனத்தில் 6GB LPDDR4x ரேம் மற்றும் 128GB eMMC 5.1 உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 108எம்பி கேமராவுடன் சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 108எம்பி கேமராவுடன் சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

வா நியோ ஸ்மார்ட்போனில் 6000

டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

உங்களுடைய ஸ்மார்ட்போனில் எவ்வளவு ரேம் இருந்தால் நல்லது? எது சிறப்பானது? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..உங்களுடைய ஸ்மார்ட்போனில் எவ்வளவு ரேம் இருந்தால் நல்லது? எது சிறப்பானது? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..

 ரேடியோ,

புளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ், எஃப்எம் ரேடியோ, ஒடிஜி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஜி-சென்சார் எனப் பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன் இந்த டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tecno Pova Neo launched in India Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X