வாரி தூக்குவீங்க.. ரூ.12000 போதும்.. 16 ஜிபி ரேம்.. 7000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டே வியக்கும் வகையில், டெக்னோ (Tecno) நிறுவனத்தின் டெக்னோ போவா நியோ 3 (Tecno Pova Neo 3) போன் மலிவான விலையில் 16ஜிபி ரேம், 7000mAh பேட்டரி, அசாகி கிளாஸ் டிஸ்பிளே என்று பிரம்மாண்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
மலிவான பட்ஜெட்டில் பக்க பேக்கப் கொடுக்கும் 7000mAh பேட்டரி, கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் 16 ஜிபி ரேம், ஹீலியோ ஜி85 சிப்செட் மற்றும் கேம் ஸ்பேஸ் 2.0 அம்சம் என்று ஒட்டுமொத்த பேக்கேஜ் போன் வாங்க வேண்டும் என்றால், டெக்னோ போவா நியோ 3 பக்காவான சாய்ஸாக இருக்கும்.

டெக்னோ போவா நியோ 3 அம்சங்கள் (Tecno Pova Neo 3 Specifications): இந்த டெக்னோ போன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.82 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு அசாகி கிளாஸ் எல்சிடி (Asahi Glass LCD) டிஸ்பிளேவாகும்.
இந்த போனின் கேமராவை பொறுத்தவரையில், 16 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா என்னும் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) மற்றும் எச்ஐஓஎஸ் 8.0 (HiOS 8.0) உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் பிரம்மாண்ட அம்சமாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகொண்ட 7000mAh பேட்டரி வருகிறது. 4 நாட்கள் பேக்கப் கிடைக்கும். இதில் எஸ்டிஎஸ் (STS) செக்யூர் பேட்டரி டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சார்ஜிங் மற்றும் கேமிங்கின் போது பேட்டரி ஹீட்டாவது தடுக்கப்படும். 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது.
அந்த வகையில் 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 256 ஜிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் டிடிஎஸ் (DTS) ஸ்பீக்கர்கள் வருகிறது. மெச்சா பிளாக் (Mecha Black), அம்பர் கோல்டு (Amber Gold) மற்றும் ஹரிக்கேன் ப்ளூ (Hurricane Blue) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
மேலும், பேஸ் அன்லான், பிங்கர்பிரிண்ட் சென்சார், என்எஃப்சி போன்ற அம்சங்களும் உள்ளன. விவிட் வால்பேப்பர் (Vivid Wallpapers), கேம் ஸ்பேஸ் 2.0 (Game Space 2.0), லிங் பூமிங் 1.0 (Link Booming 1.0), பான்தர் இன்ஜின் 2.0 (Panther Engine 2.0) போன்ற பிரத்யேக அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த டெக்னோ போவா நியோ 3 போனின் விலையை பொறுத்தவரையில், ரூ. 12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரையிலான பட்ஜெட்டில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வளவு அம்சங்களையும் கொண்டிருக்கும் போன் மலிவான பட்ஜெட்டில் விற்பனைக்கு வரவிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.
இந்த போன் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








