ரெண்டு போனா வாங்குவீங்க.. வெறும் ரூ.12,000 போதும்.. 8ஜிபி ரேம்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?
டெக்னோ நிறுவனத்தின் டெக்னோ போவா நியோ 3 (Tecno Pova Neo 3) போன் 8ஜிபி ரேம், 7000mAh பேட்டரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே என்று அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் வகையில் மட்டுமல்லாமல், மாலிவான விலையிலும் வருகிறது.
இந்தியாவில் மலிவு விலை போன்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், பட்ஜெட் விலையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள போன்களில் கொடுக்கப்படும் அம்சங்கள் கொடுத்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. இந்த வரிசையில் ரியல்மி, ஐடெல் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக டெக்னோ நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், மலிவான பட்ஜெட்டில் டெக்னோ போவா நியோ 3 போனை களமிறக்க இருக்கிறது. இந்த போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 8 ஜிபி ரேம், எச்டி பிளஸ் டிஸ்பிளே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி என்று வியக்க வைக்கிறது. இந்த போனின் முழு அம்சங்கள், வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.
டெக்னோ போவா நியோ 3 அம்சங்கள் (Tecno Pova Neo 3 Specifications): இந்த டெக்னோ போன் 6.82 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஹாய்ஓஎஸ் 13 (HiOS 13) உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது. இந்த போனில் 16 எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது.
8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னோ போவா நியோ 3 போனின் எடை 201 கிராமாக இருக்கிறது. மேலும், டூயல் நானோ சிம் போர்ட், பேஸ் அன்லாக், 3.5 மிமீ ஆடியோ ஜேக், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், என்எஃப்சி சப்போர்ட் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த டெக்னோ போவா நியோ 3 போன் மெச்சா பிளாக் (Mecha Black), ஆம்பர் கோல்டு (Amber Gold) மற்றும் ஹரிகேன் ப்ளூ (Hurricane Blue) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில் மலிவான பட்ஜெட்டில் விற்பனைக்கு வர அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், டெக்னோ போவா 3 (Tecno Pova Neo 3) போனின் விலை ரூ.10,000ஆக நிர்ணயிக்கப்பட்டது.
ஆகவே, இந்த போன் ரூ.12 ஆயிரம் அல்லது ரூ.14 பட்ஜெட்டில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








