தூக்கி பாக்கெட்டுல போடுவீங்க.. ரூ.12000 போதும்.. 8GB ரேம், 7000mAh பேட்டரி.. விடவே கூடாத மாடல்!
மலிவான பட்ஜெட்டில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி, 8 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, ஹீலியோ ஜி85 சிப்செட் என்று மிட்-ரேன்ஞ் அம்சங்களுடன் டெக்னோ போவா நியோ 3 போன் அறிமுகமாக இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
இந்தியாவில் பட்ஜெட் மற்றும் மலிவு விலை போன்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் கம்மி விலை போன்களில் அட்டகாசமான அம்சங்களை கொடுத்து வருகின்றன. இதில் டெக்னோ (Tecno) நிறுவனம் ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டுக்குள் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள போன்களின் அம்சங்களை கொடுத்து அசத்தி வருகிறது.

இப்போது டெக்னோ போவா நியோ 3 (Tecno Pova Neo 3) என்னும் 7000mAh பேட்டரி போனை நம்ம முடியாத விலையில் அறிமுகம் செய்யப் போகிறது. இந்த போனின் டிசைனும் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த போன் ஜூலை மாத இறுதியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் அதன் பட்டாசான அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
டெக்னோ போவா நியோ 3 அம்சங்கள் (Tecno Pova Neo 3 Specifications): இந்த போனில் 6.82 இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் அசாகி கிளாஸ் எல்சிடி (Asahi Glass LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் (MediaTek Helio G85) வருகிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்களில் வருகிறது. இந்த போனில் விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதோடு 256 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்படலாம்.
இந்த டெக்னோ போவா நியோ 3 போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருவதற்கு வாய்ப்புள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்படலாம். இந்த போனுக்கே பெயர் வாங்கிக்கொடுக்கப் போவது, அதன் பேட்டரி என்றே சொல்ல வேண்டும்.
ஏனென்றால், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகொண்ட 7000mAh பேட்டரி வருகிறது. இதனால் டெக்னோ போவா நியோ 3 போனின் எடை 201 கிராம் இருக்கலாம். மேலும், பேஸ் அன்லாக், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், என்எஃப்சி சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்களும் வருகிறது.
இந்த போன் பிளாக் (Black), ப்ளூ (Blue), கோல்டு (Gold) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் பட்ஜெட் ரூ.12 ஆயிரம் முதல் 14 வரையில் இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்தியாவில் டெக்னோ போவா 3 போனின் விலை ரூ.10 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டது.
ஆகவே, இந்த போன் மலிவான விலையில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








