பட்ஜெட் விலையில் 6000எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ போவா ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
டெக்னோ மொபைல் நிறுவனம் தனது டெக்னோ போவா ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் டிசம்பர் 11-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த
சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டெக்னோ போவா ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் டாட்-இன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1640 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக டெக்கோ போவா ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ் + ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கிடைக்கும்.

டெக்னோ போவா ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் HiOS 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்,எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது டெக்னோ போவா ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி.போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டக்கோ போவா ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம் கொண்ட டெக்னோ போவா ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999-விலையிலும், 6ஜிபி ரேம் கொண்ட டெக்னோ போவா மாடல் ரூ.11,999-விலையிலும் விற்பனைக்கு வரும். மேலும் Magic Blue, Speed Purple மற்றும் Dazzle Black நிறங்களில்
இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications