ஆர்டருக்கு மேல் ஆர்டர்.. ரூ.17,099 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. SONY கேமரா.. எந்த மாடல்?
பிரீமியம் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போன்களை நம்ப முடியாத பட்ஜெட் விலையில் டெக்னோ நிறுவனமானது களமிறக்கி வருகிறது. இதில் 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்ட டெக்னோ போவா கர்வ் 5ஜி (TECNO POVA Curve 5G) ஸ்மார்ட்போனானது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது, தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது.
ஸ்டார்ஷிப் இன்ஸ்பையர்ட் டிசைனில் மேஜிக் சில்வர் (Magic Silver), நியான் சியன் (Neon Cyan) மற்றும் கிரீக் பிளாக் (Geek Black) ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 3டி கர்வ்ட் டிஸ்பிளேவை கொடுத்து, பெரிய 5500mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இருப்பினும், 7.45 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கும் பெரிய பேட்டரி மாடலாக இருக்கிறது.

மேலும், 188.5 கிராம் எடை மட்டுமே கொண்ட லைட் வெயிட் மாடலாகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 10 சதவீத தள்ளுபடியில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,999 விலையில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.900 உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.
இந்த தள்ளுபடியுடன் ரூ.17,099 விலைக்கு வாங்கி கொள்ளலாம். லேட்டஸ்ட் எல்லா (Ella AI) வாய்ஸ் அசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant), ஏஐ ஆட்டோ அன்ஸர் (AI Auto Answer) மற்றும் ஏஐ வாய்ஸ்பிரிண்ட் சர்ப்பிரஸன் (AI Voiceprint Noise Suppression) உள்ளிட்ட ஏஐ பீச்சர்களையும் கொடுத்து உள்ளது. மற்ற பீச்சர்களும் பட்டையை கிளப்புகின்றன.

டெக்னோ போவா கர்வ் 5ஜி அம்சங்கள் (Tecno Pova Curve 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் (4nm Octa Core MediaTek Dimensity 7300 Ultimate) சிப்செட் கிடைக்கிறது. 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்டையும், 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் பெற்று கொள்ளலாம்.
மேலும், மாலி ஜி614 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஹாய்ஓஎஸ் 15 (HiOS 15) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மட்டுமல்லாமல், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்து உள்ளது. புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) உள்ளது.
2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. மேலும், 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரியை இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.
64 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா மற்றும் மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), IP64 ரேட்டிங் உள்ளது.


Click it and Unblock the Notifications








