Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 5500mAh பேட்டரி.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 64 எம்பி சோனி சென்சார் கேமரா, 5500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட டெக்னோ போவா கர்வ் 5ஜி (TECNO POVA Curve 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இப்போது, பட்ஜெட் விலையில் வாங்கி கொள்ளலாம். இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டுக்கு 16 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.19,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.18,999 பட்ஜெட்டில் இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் உள்ளது.

விஸ்வரூப விற்பனை! பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 5500mAh பேட்டரி!

இந்த வேரியண்ட்டுக்கு 15 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.15,999 விலைக்கு கிடைக்கிறது. ரூ.800 பேங்க் தள்ளுபடி போக ரூ.15,199 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டுக்கு 10 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.17,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இதற்கும் ரூ.900 பேங்க் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

மேஜிக் சில்வர் (Magic Silver), நியான் சியன் (Neon Cyan) மற்றும் கிரீக் பிளாக் (Geek Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. மேலும், 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. ஹைஓஎஸ் 15 (HiOS 15) இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

விஸ்வரூப விற்பனை! பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 5500mAh பேட்டரி!

டெக்னோ போவா கர்வ் 5ஜி அம்சங்கள் (Tecno Pova Curve 5G Specifications): புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. கர்வ்ட் டிசைனில் கிடைப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் (4nm Octa Core MediaTek Dimensity 7300 Ultimate) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. மாலி ஜி614 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிடைக்கிறது.

சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. 5500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

7.45 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. 188.5 கிராம் எடை கொண்டுள்ளது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைத்துள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POVA Curve 5G with 8GB RAM Available At 16 Percent Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X