மே.29-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 64MP கேமரா.. 360 டிகிரி கவரேஜ்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் டெக்னோ நிறுவனத்தின் போவா மாடல்களில் கர்வ்ட் டிஸ்பிளேவுடன் வெளியாகும் முதல் மாடலாக டெக்னோ போவா கர்வ் 5ஜி (TECNO POVA CURVE 5G) இருக்கப் போகிறது. இந்த போவா மாடலின் டிசைன், கலர், டிஸ்பிளே மற்றும் கேமரா பீச்சர்களுடன் வெளியீட்டு தேதியும் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் மாடலாக வெளியாக இருக்கும் இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டெக்னோ நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. ஆனால், கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட மாடல்களை இந்தியாவில் வெளியிடவில்லை. இப்போது டெக்னோ போவா கர்வ் 5ஜி மூலம் அதை செய்ய இருக்கிறது. மே 29ஆம் தேதி இந்த கர்வ்ட் போன் வெளியாகும் என்பதை அந்த நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

அதோடு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் முக்கிய பீச்சர்களுடன் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. இதில் டிசைன் மட்டுமல்லாமல், கலர், கேமரா மற்றும் ஏஐ பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதோடு சிப்செட் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த அதிகாரப்பூர்வ பீச்சர்களையும், மார்கெட்டில் கசிந்துள்ள பீச்சர்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டெக்னோ போவா கர்வ் 5ஜி அம்சங்கள் (TECNO POVA CURVE 5G Specifications): இந்த டெக்னோ போனானது, ஸ்டார்ஷிப் இன்ஸ்பைர்டு டிசைனில் (Starship Inspired Design) பிளாக் (Black) மற்றும் சில்வர் (Silver) கலர்களில் கிடைக்க இருக்கிறது. முந்தைய மாடல்களில் கிடைத்த ஏஐஜிசி போர்ட்ராய்டு 2.0 (AIGC Portrait 2.0), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) மட்டுமல்லாமல், கூடுதல் ஏஐ பீச்சர்கள் வருகிறது.
ஆகவே, ஏஐ பிரைவரி பிளர் (AI Privacy Blur), ஏஐ ஆட்டோ கால் ஆன்ஸரிங் (AI Auto Call Answering), ஏஐ போட்டோ ப்ராப்லெம் சால்வர் (AI Photo Problem Solver), ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant), ஏஐ வாய்ஸ்பிரிண்ட் சப்பிரிஷன் (AI Voiceprint Suppression) போன்ற பீச்சர்கள் கிடைக்கிறது. ஹைய்ஓஎஸ் 15 (HiOS 15) எதிர்பார்க்கலாம். 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கொடுக்கிறது.
நெட்வொர்க் கம்யூனிகேஷனில் அப்கிரேட் கிடைக்கிறது. விவோவை-பை டூயஸ் பாஸ் (VoWiFi Dual Pass), 5ஜி ஹை பேண்ட்விட்த் ஆப்டிமைசேஷன் (5G High Bandwidh Optimization) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஹார்ட்வேர் லெவலில் 360 டிகிரி ஆன்டெனா சப்போர்ட் கிடைக்கிறது. கேமரா டிசைனை பார்க்கையில், 64 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
இதற்கு செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் உள்ளது. எல்லா ஏஐ (Ella AI) கிடைக்கிறது. இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7300 SoC) கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் வெளியாக இருக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. பேட்டரி பீச்சர்கள் வெளியாகவில்லை. அதேபோல இந்த பீச்சர்களை வைத்து பார்க்கும்போது, இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி போனானது பட்ஜெட்டில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மார்கெட்டில் விலை கசிந்துவிடும்.


Click it and Unblock the Notifications








