Home
Mobile

பொளந்து கட்டப் போகுது.. வெறும் ரூ.15,999 போதும்.. 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் டெக்னோ போவா கர்வ் 5ஜி (TECNO POVA Curve 5G) போன் வெளியாகி இருக்கிறது. இந்த டிஸ்பிளே மட்டுமல்லாமல், 5500mAh பேட்டரி, 45W சார்ஜிங், 64 எம்பி கேமரா போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் மிட்-ரேஞ்ச் லெவல் காட்டி இருக்கிறது. இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் விற்பனை விவரங்கள் என்ன? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

டெக்னோ நிறுவனம் பட்ஜெட்டில் பல்வேறு மாடல்களை களமிறக்கினாலும், கர்வ்ட் டிஸ்பிளே மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யாமல் இருந்து வந்தது. இப்போது, டெக்னோ போவா கர்வ் 5ஜி மூலம் அதை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது. 5500mAh பேட்டரி இருந்தும் வெறும் 7.45 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டு, இந்த செக்மெண்ட்டின் ஸ்லிம்மஸ்ட் மாடலாக களமிறங்கி இருக்கிறது.

பொளந்து கட்டப் போகுது.. வெறும் ரூ.15,999 போதும்.. 3D டிஸ்பிளே.. மாடல்?

டெக்னோ போவா கர்வ் 5ஜி அம்சங்கள் (TECNO POVA Curve 5G Specifications): இந்த டெக்னோவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கொண்ட 6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved AMOLED) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளே பீச்சர்கள் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப இருக்கிறது. அதேபோல ஸ்டார்ஷிப்-இன்ஸ்பயர்டு டிசைனிலும் கேமிங் பிரியர்களை கவர்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate 4nm) சிப் கிடைக்கிறது.

இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது. 8 ஜிபிக்கான ரேம் பூஸ்ட் சப்போர்ட் கிடைக்கிறது. ஹைய்ஓஎஸ் 15 (HiOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அப்டேட் மற்றும் 2 வருட செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.

பொளந்து கட்டப் போகுது.. வெறும் ரூ.15,999 போதும்.. 3D டிஸ்பிளே.. மாடல்?

எல்லா ஏஐ (Ella AI), ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant) போன்ற பல்வேறு ஏஐ பீச்சர்களை கொடுக்கிறது. 64 எம்பி மெயின் கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சாருடன் கிடைக்கிறது. 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 7.45 எம்எம் தடிமனில் 5500mAh பேட்டரி கொண்ட மாடலாக இருக்கிறது.

இந்த பேட்டரிக்கு 45W சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இதுபோக பைபாஸ் சார்ஜிங் டெக்னாலஜி வருகிறது. கொரில்லா கிளாஸ் மட்டுமல்லாமல், IP64 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஐஆர் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்கிறது. மூன்று கலர்களில் ஆர்டர் செய்யலாம்.

மேஜிக் சில்வர் (Magic Silver), நியான் சியன் (Neon Cyan) மற்றும் கிரீக் பிளாக் (Geek Black) கலர்கள் உள்ளது. 6 ஜிபி ரேம் மாடலானது ரூ.15,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் மாடலானது ரூ.16,999 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது. ஜூன் 5ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POVA Curve 5G With 64MP Camera Launched India Sale From June 5 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X