மொத்த தீபாவளிக்கு இந்த ஒத்த ஆஃபர் போதும்.. ரூ.14,999-க்கு 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் டெக்னோ போவா கர்வ் 5ஜி (TECNO POVA Curve 5G) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொடுப்பது மட்டுமல்லாமல், சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5500mAh பேட்டரி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட் கொண்ட இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 உடனடி தள்ளுபடி போக கிடைக்கிறது.

ஆகவே, ரூ.14,999 பட்ஜெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், அதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் வேண்டுமானால், இந்த போவா கர்வ் போனை வாங்கி கொள்ளலாம். இதுபோக சிப்செட், பேட்டரி, கேமரா பீச்சர்களிலும் பட்டையை கிளப்புகிறது.
டெக்னோ போவா கர்வ் 5ஜி அம்சங்கள் (TECNO POVA Curve 5G Specifications): இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி614 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஹைய்ஓஎஸ் 15 (HiOS 15) கிடைக்கிறது.
இந்த ஓஎஸ் மூலம் எல்லா ஏஐ (Ella AI) அசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், ஏஐ கால் அசிஸ்டன்ட் (AI Call Assistant), ஏஐ ஆட்டோ அன்ஸர் (AI Auto Answer) மற்றும் ஏஐ வாய்ஸ்பிரிண்ட் நாய்ஸ் சர்ப்பிரஷன் (AI Voiceprint Noise Suppression) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கொடுக்கும்படி லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. கேமிங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஓடிடி பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்கின்றன. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved AMOLED) கிடைக்கிறது. மேலும், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
இதுபோக 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. முன்பே சொன்னதை போல கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளேவுக்கு புரொடெக்சன் கொடுக்கும்படி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) கிடைக்கிறது. மேலும், IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது.
64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா + 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி உள்ளது. நியான் சியன் (Neon Cyan), மேஜிக் சில்வர் (Magic Silver) மற்றும் கிரீக் பிளாக் (Geek Black) ஆகிய 3 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








