Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.15,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. 64MP கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஸ்மார்ட்போன் பிரியர்கள் விரும்பும்படியான அடிமட்ட பட்ஜெட்டில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான டெக்னோ போவா கர்வ் 5ஜி (TECNO POVA Curve 5G) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. இந்த டெக்னோ போனை எங்கே ஆர்டர் செய்வது? விலை என்ன? பீச்சர்கள் எப்படி? உள்ளிட்ட விரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டெக்னோ போவா கர்வ் 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (TECNO POVA Curve 5G Flipkart Sale): இந்த டெக்னோ போனின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது.

யாரு சாமி அவன்.. ரூ.15,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. மாடல்?

இந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு இருந்தால், ரூ.800 டிஸ்கவுண்ட் கிடைக்கும். ரூ.15,360 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி போனை நியான் சியன் (Neon Cyan), மேஜிக் சில்வர் (Magic Silver) அல்லது கிரீக் பிளாக் (Geek Black) கலர்களில் வாங்கலாம்.

டெக்னோ போவா கர்வ் 5ஜி அம்சங்கள் (TECNO POVA Curve 5G Specifications): இந்த டெக்னோவின் டிஸ்பிளே பீச்சர்களே தட்டித்தூக்கும்படி இருக்கிறது. 6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved AMOLED) மட்டுமல்லாமல், அதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது. இதுபோக 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் உள்ளது.

மேலும், 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1080P ரெசொலூஷன் கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கொரில்லா கிளாஸ் 5 (Gorilla Glass 5) புரொடெக்சன் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோவிலும் மிரளவிட்டுள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கிறது.

யாரு சாமி அவன்.. ரூ.15,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. மாடல்?

இதற்கு ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்களுடன் ஹைய்ஓஎஸ் 15 (HiOS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் பெற்று கொள்ளலாம். டிஸ்பிளே பீச்சர்களுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படி பக்காவான சிப்செட்டை பேக் செய்துள்ளது.

ஆகவே, ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் (Octa Core 4nm MediaTek Dimensity 7300 Ultimate) சிப்செட் அவுட்புட் பெற்று கொள்ளலாம். 11 லேயர் ஹைப்பர் கூலிங் சப்போர்ட் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகரான கேமரா சிஸ்டம் கொடுக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா வருகிறது.

இந்த கேமராவுக்கு 2 எம்பி போர்ட்ராய்டு செகண்டரி கேமரா கிடைக்கிறது. இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி போனில் 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 5500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. இந்த பெரிய பேட்டரியுடன் வெறும் 7.45 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பக்கா மாடலாக இந்த டெக்னோ இருக்கிறது.

Best Mobiles in India

English summary
TECNO POVA Curve 5G With 64MP Camera Available For Purchase in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X