Home
Mobile

வெச்சி செஞ்ச SALE.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர்களை தட்டித் தூக்கும்படியான தள்ளுபடி விலையில் டெக்னோ போவா கர்வ் 5ஜி (TECNO POVA Curve 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, பெரிய 5500mAh பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.

மற்ற ஸ்மார்ட்போன்களை போலல்லாமல், ஸ்டார்ஷிப் டிசைனில் வெறும் 7.45 எம்எம் பாடி மட்டுமே கொண்டுள்ளது. ஸ்லிம் பாடியில் 5500mAh பேட்டரியை கொடுத்து உள்ளது. 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளேவும் கிடைப்பதால், பிரீமியம் லுக்கை பட்ஜெட்டில் கிடைக்கிறது. கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ் சென்சாரை பார்க்க முடிகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

வெச்சி செஞ்ச SALE.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

ஆகவே, 3டி கர்வ்ட் டிஸ்பிளேவில் மட்டும் கவனம் செலுத்தாமல், மற்ற பீச்சர்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ப கொடுக்கப்பட்டு உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன. பிறகு 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் புதிதாக சேர்க்கப்பட்டது.

இந்த வேரியண்ட்டானது, 16 சதவீத தள்ளுபடி போக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடியுடன் ரூ.18,999 விலைக்கு இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

வெச்சி செஞ்ச SALE.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

இதுபோன்ற பட்ஜெட்டில் கிடைக்கும் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடல்களில் புரொடெக்சனை பார்க்க வேண்டி இருக்கும். ஆனால், இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனில் அந்த கவலை இருக்காது. ஏனென்றால், இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. முழு பீச்சர்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கின்றன.

டெக்னோ போவா கர்வ் 5ஜி அம்சங்கள் (TECNO POVA Curve 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் (Octa Core 4nm MediaTek Dimensity 7300 Ultimate) சிப்செட்டை இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஏஐ பீச்சர்களுடன் ஹைஓஎஸ் 15 (HiOS 15) கிடைக்கிறது.

1 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. மாலி ஜி614 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.

64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. மேலும், சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. 6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

மேலும், புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்டுள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP64 ரேட்டிங் கிடைக்கிறது. ஸ்டார்ஷிப் டிசைனில் மேஜிக் சில்வர் (Magic Silver), நியான் சியன் (Neon Cyan) மற்றும் கிரீக் பிளாக் (Geek Black) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X