Home
Mobile

பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 8000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் டிஸ்பிளே ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால், தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி (TECNO POVA Curve 2 5G) ஸ்மார்ட்போனை கண்ணை மூடிக் கொண்டு வாங்கி கொள்ளலாம். ஏனென்றால், 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுடன் 8000mAh பேட்டரியை இந்த போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 6 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.29,999 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.28,499 விலைக்கு இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 8000mAh பேட்டரி.. மாடல்?

டெக்னோ போவா கர்வ் 2 5ஜி அம்சங்கள் (TECNO POVA Curve 2 5G Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.78 இன்ச் (2644 x 1208 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவை இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், 1.5K ரெசொலூஷன், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2304Hz PWM டிம்மிங் பிரிகொன்சி கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட்டை இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி கொடுக்கிறது.

இந்த சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஹாய்ஓஎஸ் 16 (HiOS 16) கிடைக்கிறது. இதில் எல்லா ஏஐ 2.0 (ELLA AI 2.0) கிடைக்கிறது. இதில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ஏஐ நாய்ல் ரெடக்சன் (AI Noise Reduction) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்ட மாடலாக இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு எப்/1.7 அபெர்சர் மற்றும் 2K ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. செல்பீ & வீடியோ கால்களுக்கா 13 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.

3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடல்களில் பெரிய பேட்டரி கொடுக்கப்படாது. ஆனால், இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 8000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. பெரிய பேட்டரி இருந்தும் 7.42 எம்எம் தடிமன் மற்றும் 195 கிராம் எடை மட்டுமே கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.

பாட்டம் போர்டெட் சிங்கிள் ஸ்பீக்கர் (Bottom-ported Single Speaker) கிடைக்கிறது. மேலும், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கும்படி மிஸ்டிக் பர்பிள் (Mystic Purple), ஸ்டார்ம் டைட்டானியம் (Storm Titanium) மற்றும் மெல்டிங் சில்வர் (Melting Silver) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
TECNO POVA Curve 2 5G with Storm Titanium 8GB RAM Available At 6 Percent Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X