Home
Mobile

அடுத்த Tecno 5ஜி போன் ரெடி.. 8000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

இந்தியாவில் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி (Tecno Pova Curve 2 5G) ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 13-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் இந்த போனின் பேட்டரி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெக்னோ போவா கர்வ் 2 5ஜி அம்சங்கள் (Tecno POVA Curve 2 5G Specifications): தற்போது ஆன்லைனில் வெளியான டீசரின்படி, 8000mAh பேட்டரி உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

அடுத்த Tecno 5ஜி போன் ரெடி.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

குறிப்பாக 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு எட்ஜ் அமோலெட் (curved-edge AMOLED) டிஸ்பிளே உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி வெளிவரும். இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட் (MediaTek Dimensity 7100 chipset) உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது டெக்னோ போவா கர்வ் 2 5ஜி மாடல் . செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அடுத்த Tecno 5ஜி போன் ரெடி.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

HiOS 16 மற்றும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னோ நிறுவனம்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் குறைவான எடையைக் கொண்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Pova Curve 2 5G with 8000mAh battery will be launched in india: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X