அறிமுகமானது புது TECNO 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
டெக்னோ நிறுவனம் தனது புதிய டெக்னோ போவா கர்வ் 2 5ஜி (Tecno Pova Curve 2 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
டெக்னோ போவா கர்வ் 2 5ஜி அம்சங்கள் (Tecno POVA Curve 2 5G Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு எட்ஜ் அமோலெட்(curved-edge AMOLED) டிஸ்பிளே உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) 4500 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 (Octa Core MediaTek Dimensity 7100) சிப்செட் உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி - ஜி610 ஜிபியு (Mali - G610 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்று என இரண்டு வேரியண்ட்களில் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. HiOS 16 மற்றும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), பாட்டம் - போர்டெட் ஸ்பீக்கர்கள், மைக்ரோபோன்கள் ஆகிய வசதிகள் இந்த புதிய டெக்னோ போனில் உள்ளன.
IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

8000mAh பேட்டரி உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
டெக்னோ போவா கர்வ் 2 5ஜி விலை
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட டெக்னோ போவா கர்வ் 2 5ஜி போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.29,999-ஆக உள்ளது. வரும் பிப்ரவரி 20-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். மிஸ்டிக் பர்பிள் ( Mystic Purple), ஸ்டார்ம் டைட்டானியம் (Storm Titanium) மற்றும் மெல்டிங் சில்வர் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








