நாளைக்கு லான்ச் ஆகும் இந்த Tecno 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
இந்தியாவில் டெக்னோ நிறுவனம் நாளை (பிப்ரவரி 13) மதியம் 12 மணி அளவில் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி (Tecno Pova Curve 2 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் அறிமுகத்திற்கு முன்பு இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
டெக்னோ போவா கர்வ் 2 5ஜி அம்சங்கள் (Tecno POVA Curve 2 5G Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு எட்ஜ் அமோலெட் (curved-edge AMOLED) டிஸ்பிளே உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி வெளிவரும். இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட் (MediaTek Dimensity 7100 chipset) உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
8000mAh பேட்டரி உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது டெக்னோ போவா கர்வ் 2 5ஜி மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக HiOS 16 மற்றும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னோ நிறுவனம்.

அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் 7.42 மிமீ தடிமனை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது மற்றும் எடையில் இது 195 கிராம் இருக்கும்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.20,000-க்கு கீழ் இந்த புதிய டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 8000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








