Home
Mobile

நாடே இந்த Tecno 5ஜி போனுக்கு தான் வெயிட்டிங்.. 8000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஐபி64 ரேட்டிங்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் அடுத்து டெக்னோ போவா கர்வ் 2 5ஜி (Tecno Pova Curve 2 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த புதிய டெக்னோ போவா கர்வ் 2 5ஜி படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.

பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) மற்றும் டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் மற்ற போன்களை விட தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

 நாடே இந்த Tecno 5ஜி போனுக்கு தான் வெயிட்டிங்.. 8000mAh பேட்டரி..

டெக்னோ போவா கர்வ் 2 5ஜி அம்சங்கள் (Tecno Pova Curve 2 5G specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு எட்ஜ் அமோலெட் (curved-edge AMOLED)டிஸ்பிளே உடன் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட் (MediaTek Dimensity 7100 chipset) உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

HiOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16(Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெக்னோ நிறுவனம்.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8000mAh பேட்டரி உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் இந்த போனில் உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த புதிய டெக்னோ போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

photo credits: xpertpick

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Pova Curve 2 5G images and specifications leaked: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X