Home
Mobile

தெறிக்க விட்டான் TECNO.. 5ஜி, 8000mAh பேட்டரி, 7.4மிமீ ஸ்லிம் டிசைன், 12GB ரேம் உடன் புது போன்.. என்ன விலை?

டெக்னோ (TECNO) நிறுவனம் இந்திய மொபைல் மார்க்கெட்டை தெறிக்க விட தயாராகி வருகிறது. ஸ்லிம் டிசைன் + பட்ஜெட் விலையில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. எப்போது? என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது டெக்னோ போவா கர்வ் 2 5ஜி (TECNO Pova Curve 2 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது கடந்த மே 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனை தொடர்ந்து வரும் புதிய மாடல் ஆகும்.

தெறிக்க விட்டான் TECNO.. 5ஜி, 8000mAh பேட்டரி, 7.4மிமீ ஸ்லிம் டிசைன்!

எப்போது அறிமுகம்? டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது ஒரு பிரத்யேக வெளியீட்டு நிகழ்வு மூலம் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது சாஃப்ட் லான்ச் (Soft Launch) ஆக, அதாவது அமைதியான முறையிலான வெளியீடாக இருக்குமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டெக்னோ பிராண்டால் பகிரப்பட்ட அதிகாரப்பூர்வ டீஸர்களின் அடிப்படையில், போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்லிம் ஆன டிசைனை கொண்டிருக்கும். இது 7.4 மிமீ தடிமனை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது மற்றும் எடையில் இது 194 கிராம் இருக்கும். ஸ்மார்ட்போனில் உள்ள பவர் பட்டன் ஆரஞ்சு நிறத்தில் உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் வரும் என்பதையும் டெக்னோ உறுதிப்படுத்தியுள்ளது - பிளாக், சில்வர் மற்றும் வயலட். அனைத்து ஷேட்களும் பேக் பேனலின் கீழ் பகுதிக்கு அருகில் ஒரு சிறிய அசென்ட் செக்ஷனை கொண்டுள்ளன, இது ஸ்பேஸ் 2.0 டிசைன் லேங்குவேஜை அடிப்படையாகக் கொண்ட செமி டிரான்ஸ்ப்ரென்ட் லுக்கை கொண்டதாக தெரிகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குறுகிய பெசல்களுடன் கூடிய கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே - கண் பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, இது 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் சிப்செட் விவரங்களை டெக்னோ இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும், 12GB வரை ரேம் மற்றும் 256GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேமராக்களை பொறுத்தவரை டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும், இதில் இரண்டு லென்ஸ்கள் ஒரே கிடைமட்ட டேப்லெட்டில் வைக்கப்படும், அதே நேரத்தில் மூன்றாவது லென்ஸ் ரிங்கின் கீழே நிலைநிறுத்தப்படும் என்பதை டீஸர் படங்கள் குறிப்பிடுகின்றன.

சரியான சென்சார் விவரங்கள் இன்னும் பகிரப்படவில்லை. இருப்பினும் இதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8000mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? டெக்னோ நிறுவனம் இன்னும் போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை வெளியிடவில்லை. இருப்பினும் இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் ரேம் விலை அதிகரிப்பின் விளைவாக 2026 இல்அறிமுகமாகும் பெரும்பாலான போன்களின் விலைகளில் - உயர்வு இருக்கத்தான் செய்யும்.

நினைவூட்டும் வண்ணம் டெக்னோ போவா கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விலை - பேஸிக் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.15,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இது 8GB ரேம் ஆப்ஷனிலும் வெளியானது; அதன் விலை ரூ.16,999 என்று நிர்ணயிக்கப்பட்டது. டெக்னோ போவா கர்வ் 2 5ஜி அறிமுகம் செய்யப்பட்டதும் இது பிளிப்கார்ட்டிலும், ஆஃப்லைன் சில்லறை விற்பனை சேனல்களிலும் பிரத்தியேகமாக கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tecno Pova Curve 2 5G Display Chipset Camera Battery Round Up Ahead India Launch on Feb 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X