Nothing வயிற்றில் புளியை கரைத்த POVA.. 8000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. SONY கேமரா.. அதே டைலர்.. அதே வாடகை!
நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் கிடைத்துவந்த கிளைப் மேட்ரிக்ஸ் (Glyph Matrix) டிஸ்பிளேவை போலவே டெக்னோ நிறுவனத்தின் புதிய போவா 8 5ஜி (POVA 8 5G) ஸ்மார்ட்போனில் அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே (Alive Matrix Display) இடம்பெற்றுள்ளது. இந்த டெக்னோ போவா 8 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் டெக்னோ நிறுவனத்தின் போவா சீரிஸ் மாடல்களின் கீழ் போவா 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நத்திங் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் டிசைனை இதில் பார்க்க முடிகிறது. அதேபோல இதில் கிடைக்கும் அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளேவானது, கிளைப் மேட்ரிக்ஸ் டிஸ்பிளேவை நினைவுப்படுத்தும்படி இருக்கின்றன.

ஆனால், விலையில் நத்திங் மாடல்களைவிட கம்மியாகவே இருக்கிறது. இந்த அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளேவில் 49 வகையான அனிமேஷன்கள் கிடைக்கிறது. இதில் கால்கள், நேட்டிபிகேஷன்கள், சார்ஜிங் ஸ்டேட்டஸ், ஆக்டிவ் கேமிங் உள்ளிட்ட அணுகல்கள் கிடைக்கிறது. வை-பை உள்ளிட்ட கனெக்டிவிட்டி என்ஹான்ஸ்மெண்ட்களுக்கு பிரத்யேக சிப்களை கொடுக்கிறது.
டெக்னோ போவா 8 அம்சங்கள் (TECNO POVA 8 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட்டை இந்த டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
2 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் மூன்று வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ஹைய்ஓஎஸ் 16 (HiOS 16) கிடைக்கிறது. இதில் ஏஐ யூடியூப் சம்மரி (AI YouTube Summary), ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் (AI Noise Cancellation), ஏஐ லைட்மாஸ்டர் 2.0 (AI LightMaster 2.0) மற்றும் ஏஐ ஹெல்த் (AI Health) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 13 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த டெக்னோ போவா 8 5ஜி கொடுக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் ஐஆர் சென்சார் (IR Sensor) கொண்ட மாடலாக இருக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கிடைக்கின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 8.8 எம்எம் தடிமன் மற்றும் 225 கிராம் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 80211.ஏசி மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டிகள் கிடைக்கிறது. 16 பிட் ஒயிட் (White) மற்றும் டெர்மினல் கிரீன் (Terminal Green) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ரூ.31,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. வருகிற ஜூன் 18ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். நத்திங் போன்ற டிசைன் பட்ஜெட்டில் வேண்டுமானால், இதை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications