Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. 6500mAh பேட்டரி.. 12GB ரேம்.. MD 7300 சிப்செட்.. புது TECNO ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனத்தின் போவா சீரிஸ் மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. நத்திங் மாடல்களை போல பிரத்யேக டிசைன் மட்டுமல்லாமல், மேட்ரிக்ஸ் டிஸ்பிளே கொண்ட மாடல்களும் இதில் கிடைக்கின்றன. இப்போது, புதிய மாடலாக டெக்னோ போவா 8 ப்ரோ 5ஜி (TECNO POVA 8 Pro 5G) ஸ்மார்ட்போன் களமிறங்க இருக்கிறது.

கடந்த வாரம் இந்திய மார்கெட்டில் போவா 8 5ஜி (POVA 8 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ரியர் கேமராவுக்கு அருகில் அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே (Alive Matrix Display) கொடுத்ததால், மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஜூன் 18ஆம் தேதியில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆனால், இதற்கு முன்னதாகவே ப்ரோ மாடலின் பீச்சர்கள் கசிந்துவிட்டன.

வெச்சி செஞ்சிட்டாங்க.. 6500mAh பேட்டரி.. 12GB ரேம்.. MD 7300 சிப்செட்!

டெக்னோ போவா 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் சிப்செட், டிஸ்பிளே மற்றும் ரேம் உள்ளிட்ட பீச்சர்கள் கூகுள் பிளே கன்சோல் (Google Play Console) வழியாக கசிந்துள்ளது. டிசைன் குறித்த விவரங்கள் தெரியவில்லை. ஆகவே, மேட்ரிக்ஸ் டிஸ்பிளே கிடைப்பது தெரியவில்லை. இருப்பினும், பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இருக்கும் என்பது தெரிகிறது.

டெக்னோ போவா 8 ப்ரோ 5ஜி அம்சங்கள் (TECNO POVA 8 Pro 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (MediaTek Dimensity 7300 SoC) கொண்ட மாடலாக இருக்கிறது. ஆகவே, பிரீமியம் மாடல்களுக்கு நிகரான பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். 12 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது.

1208 x 2644 பிக்சல்கள் ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 520 பிபிஐ பிக்சல் டென்சிட்டிகிடைக்கிறது. ஆர்ம் மாலி ஜி615 ஜிபியு (ARM Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்க இருக்கிறது. மேலும், 6500mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8 எம்எம் தடிமன் கிடைக்க இருக்கிறது. 512 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது.

இந்த பீச்சர்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. மற்ற பீச்சர்கள் வெளியாகவில்லை. ஓரிரு மாதங்களில் இந்த டெக்னோ போவா 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். இந்தியாவில் டெக்னோ போவா 8 5ஜி ஸ்மார்ட்போன் கிடைப்பதால், இந்த ப்ரோ மாடலையும் எதிர்பார்க்கலாம். இப்போது, முன்னதாக வெளியான டெக்னோ போவா 8 மாடலை பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட் கிடைக்கிறது. மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஹைய்ஓஎஸ் 16 (HiOS 16) உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. 2K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.

சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8000mAh பேட்டரியை இந்த டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மட்டுமே கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது.

அறிமுக சலுகையுடன் வருகிற ஜூன் 18ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, டெக்னோ போவா 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.35,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். டாப் வேரியண்ட்டின் விலை ரூ.40,000 பட்ஜெட்டுக்குள் இருக்கலாம். ஓரிரு வாரங்களில் டெக்னோ நிறுவனமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
TECNO Pova 8 Pro 5G With MediaTek Dimensity 7300 Chipset Launching Soon Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X