ஜூன் 11-ல் களமிறங்கும் புதிய Tecno 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?
டெக்னோ நிறுவனம் இந்தியாவில் புதிய டெக்னோ போவா 8 (Tecno Pova 8) ஸ்மார்ட்போனை வரும் ஜூன் 11-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா, கிளிஃப் மேட்ரிக்ஸ் சிஸ்டம், டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். இப்போது ஆன்லைனில் வெளியான டெக்னோ போவா 8 போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
டெக்னோ போவா 8 அம்சங்கள் (Tecno Pova 8 Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் 7100 சிப்செட் (MediaTek Dimensity 7100 chipset) உடன் டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஆன்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். குறிப்பாக இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் புதிய டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
6.7-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே உடன் டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) இருப்பதாக கூறப்படுகிறது.

8000எம்ஏஎச் பேட்டரி உடன் டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credits: tecno


Click it and Unblock the Notifications