Home
Mobile

செம்ம டிமாண்ட்.. ஆஃபர் ரேட்ல 8000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

மேட்ரிக்ஸ் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களில் 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக வெளியாகி மிகப்பெரும் வரவற்பை டெக்னோ போவா 8 5ஜி (TECNO POVA 8 5G) ஸ்மார்ட்போன் பெற்றது. இப்போது, நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைப்பதால் விற்பனையிலும் பட்டையை கிளப்பி வருகிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 25 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.29,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ரூ.28,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

செம்ம டிமாண்ட்.. ஆஃபர் ரேட்ல 8000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. மாடல்?

டெக்னோ போவா 8 5ஜி அம்சங்கள் (TECNO POVA 8 5G Specifications): 6.76 இன்ச் (1080 x 2344 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட் கிடைக்கிறது. மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைஓஎஸ் 16 (HiOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ யூடியூப் சம்மரி (AI YouTube Summary), ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் (AI Noise Cancellation), ஏஐ லைட் மாஸ்டர் 2.0 (AI LightMaster 2.0) மற்றும் ஏஐ ஹெல்த் (AI Health) போன்ற பீச்சர்களை இந்த ஹைஓஎஸ் கொடுக்கிறது. ஜி2 சிக்சனல் என்ஹான்ஸ்மெண்ட் சிப் (G1 Signal Enhancement Chip) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், எஸ்இ1 வை-பை என்ஹான்ஸ்மெண்ட் சிப் (SE1 Wi-Fi Enhancement Chip) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் இந்த டெக்னோ போவா 8 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 2K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் செல்பீ, வீடியோ கால்களுக்காக 13 எம்பி ஃப்ரன்ட் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. இதிலும் 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஐஆர் சென்சார் (IR Sensor) கிடைக்கிறது. பாட்டர் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கிடைக்கின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைத்துள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.8 எம்எம் தடிமன் மற்றும் 225 கிராம் எடை கொடுத்துள்ளது. 16 பிட் ஒயிட் (Bit White) மற்றும் டெர்மினல் கிரீன் (Terminal Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ மற்றும் ப்ளூடூத் 5.4 உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை இந்த டெக்னோ போவா 8 5ஜி கொடுக்கிறது. மேட்ரிக்ஸ் டிஸ்பிளே கொண்ட மாடல்களில் பெரிய பேட்டரியையும் இந்த டெக்னோ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
TECNO POVA 8 5G With 6GB RAM Available At 25 Percent Discount on Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X