Home
Mobile

நாளை களமிறங்கும் புது Tecno 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனம் டெக்னோ போவா 8 5ஜி (TECNO POVA 8 5G) ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய போன் நாளை பிளிப்கார்ட் தளத்தில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

டெக்னோ போவா 8 5ஜி அம்சங்கள் (TECNO POVA 8 5G Specifications): 6.76-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிளாட் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080×2344 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

நாளை களமிறங்கும் புது Tecno 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 7100 6nm processor) உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. HiOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

50எம்பி Sony LYT-600 மெயின் ரியர் கேமரா உடன் டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), ஐஆர் சென்சார் (IR Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன். 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 80211.ஏசி, ப்ளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போனில் உள்ளன. 16 பிட் ஒயிட் (White) மற்றும் டெர்மினல் கிரீன் (Terminal Green) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்கலாம்.

நாளை களமிறங்கும் புது Tecno 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

8000எம்ஏஎச் பேட்டரி உடன் டெக்னோ போவா 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

டெக்னோ போவா 8 5ஜி விலை
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட டெக்னோ போவா 8 5ஜி மாடலின் விலை ரூ.29,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட டெக்னோ போவா 8 5ஜி மாடலின் விலை ரூ.31,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Tecno Pova 8 5G phone will go on sale for the first time tomorrow: check price, specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X